ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவாகி வெளி வராமல் போன படத்தின் பாடல் ஷுட்டிங் செய்யப்பட்ட காட்சி ஒன்று 23 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா ராய் கடந்த 1997-ம் ஆண்டு ‘ராதேஷ்யம் சீதாராம்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
சில காரணங்களால் அந்த படம் வெளியாகவில்லை. தற்போது அந்த படத்திற்காக பாடல் காட்சியாக்கப்பட்ட காணொளி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
அதனை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராயின் அழகையும், அவரது முகபாவனைகளையும் வர்ணித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
23 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படமாக இருந்தாலும் இப்போது கொஞ்சம் கூட மாற்றம் இல்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



