Saturday, May 30, 2020
Home சினிமா Tamil cinema News BigBoss சும்மா பத்தினினு சொல்லக்கூடாது.. ஆடை சர்ச்சையில் மதுமிதாவிற்கு பதிலளித்த அபிராமி...! #Abirami #Madumitha #Biggboss

சும்மா பத்தினினு சொல்லக்கூடாது.. ஆடை சர்ச்சையில் மதுமிதாவிற்கு பதிலளித்த அபிராமி…! #Abirami #Madumitha #Biggboss

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டு 105 நாட்களாக பல சர்ச்சைகளையும், பிரச்சனைகளையும் தாண்டி கடந்த 6 ஆம் திகதி நிறைவடைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்களில் ஒருவராக கொமெடி நடிகை மதுமிதாவும் பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில், இவர், முதல் வாரமே ஆடைகள், மற்றும் பாட்டில் பேபி குறித்து பேசியது போட்டியாளர்களுக்கு பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.

இதனால், ஒரு சிலரை தவிர, இவரை ஒட்டுமொத்த குடும்பமும் வெறுக்க ஆரம்பித்த நிலையில், இவர் என்ன கூறினாலும் தவறு என்று பிரச்சனை செய்ய ஆரம்பித்தனர்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து, திடீரென்று, பிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சி செய்ததாக கூறி அவர் வெளியேற்றப்பட்டார்.

இதற்கு, சாண்டி குரூப் தான் தான் காரணம் என்று கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இவர் மீது விஜய் தொலைக்காட்சி பணம் கேட்டு தற்கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த மதுமிதா, தொலைக்காட்சி கொடுத்த புகார் பொய் புகார் என்று கூறினார். பின்பு நீண்ட நாட்களுக்கு பின்பு பேட்டிகள் கொடுக்க தொடங்கிய மதுமிதா, தான் தற்கொலை முயற்சி செய்யவில்லை, என் கருத்து நியாயமானது என்று நிரூபிப்பதற்கு தான் அவ்வாறு கூறினேன் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், அபிராமி ஆண்களுக்கு முன்னால் உள்ளாடை கூட அணியாமல் சுற்றி வந்தார் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது பேட்டி ஒன்றில் அபிராமி இதுகுறித்து பேசியுள்ளார்.

அதில், அபிராமி ஆடை விவகாரத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே மதுமிதா பேசியிருக்கிறார். சிலர் எப்போதும் மாற மாட்டார்கள்அவர்களை நாம் எவ்வளவுதான் நாம் நல்லபடியாக பார்த்தாலும் அவர்கள் மாற மாட்டார்கள்.

என்னை பொருத்தவரை நான் பார்த்தவரை மதுமிதா தனக்கு இதுதான் வேண்டும் அதுதான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் ஒரு சிறு குழந்தை போலத்தான் இருந்துவந்தார். அப்படிப்பட்ட மதுமிதாவை தான் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த ஆடை விவகாரம் அடிக்கடி எனக்கு சங்கடமான விஷயமாக தொடர்ந்து வருகிறது. இதைப் பார்க்கும்போது மற்றவர்களும் மனநிலை மாறவேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன்.

அதேபோல எனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நான் உள்ளாடை அணியாமல் இருந்ததை பலபேர் கமெண்ட் செய்தார்கள். அவர்களும் தமிழர்கள் தான் தமிழ் தமிழ் என்று சொல்லும் நபர்கள் தான் இதுபோன்ற கமெண்ட்களை போட்டு வந்தார்கள். ஆனால், அதனை ஒரு குப்பையாக நினைத்து நான் தூக்கி எறிந்து விட்டேன்.

நான் மற்றவர்களுக்கு சொல்ல வேண்டியதை நமது நடத்தையில் தான் காட்ட வேண்டுமே தவிர அனைவரிடமும் போய் நாம் கூற வேண்டிய அவசியமில்லை. அவர்கள் அடிக்கடி சொல்லும் உன்னதமான வார்த்தைகளில் பத்தினி என்று சொல்லும் அடங்கும். ஆனால், பத்தினி என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால், என்னை அசிங்கப் படுத்தும் கமெண்ட்கள் அதிகம் வருகிறது .

ஒரு பெண்ணை அவர் அணியும் ஆடையை காரணமாக காட்டி கற்பழித்து விட்டால் என்று கூறினால் அதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா என்று கூறியுள்ளார் அபிராமி.

- Advertisment -

ஏனைய செய்திகள்

பீஷ்மரைவிட சகுனி ஏன் சிறந்தவன் ? கிருஷ்ணரின் விளக்கம்

#சகுனி தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி, இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே...

வியப்பூட்டும் மலர் மருத்துவம் – Flower Theraphy Natural Medicine

மூலிகைகள் எப்படி நோய் தீர்க்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறதோ, அதேபோல் மலர்களும் சக்தி வாய்ந்தவையே. இந்திய மருத்துவத்தில் மலர்களை பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனாலும், இதற்கு நவீன அடையாளமும் அங்கீகாரமும் கொடுத்தவர்...

காற்று மாசை இனி கட்டுப்படுத்தலாம்… -Air pollution can no longer...

இன்று மொத்த உலகையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது காற்று மாசு. இத்தகைய சூழலில் நாம் வாழும் நம் வீடு/அலுவலகத்தில் சுத்தமான காற்றை சுவாசிக்கத் தரும் செடிகள் குறித்து தெரிந்துகொள்வோம். Air pollution can...

உன் சமயலறையில் …..!

* புளித்த மோராக இருந்தால் மோர்க்குழம்பு ஜீரணமாகாது. சிறிது பூண்டு சேர்த்தால் குழம்பு சுவையாகவும் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். * பிரெட் ஸ்லைஸ் மீதியாகி விட்டால் அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில்...

வாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி -papaya cures Mouth sore

பப்பாளி மரத்தின் இலைகள், விதைகள், காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்தப் பழத்தை ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்றும் வர்ணிக்கின்றனர். * பப்பாளிக்காயை கூட்டாகச் செய்து சாப்பிட்டு வந்தால் குண்டான உடல்...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline