ஹாலிவுட் கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோவின் ரகசிய வாழ்க்கை – நாளை முதல் ஒளிபரப்பு

மறைந்த ஹாலிவுட் கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோவின் ரகசிய வாழ்க்கை பற்றிய குறுந்தொடர் நாளை முதல் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது.

1947-ஆம் ஆண்டு ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய மர்லின் மன்றோ, தொடர்ந்து பல படங்களில் தனது அபார நடிப்புத் திறமையாலும், அழகாலும் ரசிகர்களை கவர்ந்தவர். நகைச்சுவை பாத்திரங்களில் இவரது நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது.

கோல்டன் குளோப் விருது மற்றும் அனைத்து காலப்பகுதிக்குமான சிறந்த நடிகை என அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் பாராட்டும் பெற்றவர். நடிகையாக மட்டுமின்றி பாடகி, இயக்குனர் என பல்வேறு முகங்களும் இவருக்கு உண்டு.

தன்னுடைய கடைசி நாட்களில் போதைக்கு அடிமையான இவர், 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். போதைப் பொருள் அதிகம் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று அறிவிக்கப்பட்டாலும், கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், கவர்ச்சி கன்னி மர்லின் மன்றோவின் ரகசிய வாழ்க்கை பற்றிய குறுந்தொடர் நாளை முதல் ’ஹிஸ்ட்டரி டிவி18’ என்ற தனியார் தொலைக்காட்சியில் தொடர்நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது.

பத்திரிகைகள், செய்தியாளர்களிடம் இருந்து தனது அந்தரங்க வாழக்கையை மர்லின் மன்றோ எவ்வாறு மறைத்து வாழ்ந்தார்? அவரது வாழ்க்கையில் மையம் கொண்டிருந்த பிரபலஸ்தர்கள் யார்? என்னும் ரகசியங்களை இந்த தொடர் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles