ஸ்ரீ ரெட்டி அண்மைகாலமாக இணையதளங்கள், செய்திகள் என பலவற்றிலும் உலாவி வந்த பெயர். தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகையான இவர் ஹைதராபாத்திலிருந்து தற்போது சென்னைக்கு வந்துவிட்டார்.
அவர் சில நடிகர்கள், இயக்குனர்களின் பெயர்களை கூறி தனக்கு வாய்ப்பளிப்பதாக கூறி ஏமாற்றிவிட்டார்கள் என புகார் அளித்திருந்தார். மேலும் சிலர் தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டார்கள் என கூறினார்.
இந்நிலையில் தற்போது அவர் மீது நடிகர் வராஹி என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதில் அவர் ஸ்ரீ ரெட்டி சினிமாத்துறையில் உள்ளவர்களை பயமுறுத்தி வருகிறார்.
அவர் இதன் மூலம் பண ஆதாயம் தேடுகிறார். அத்துடன் அவரே பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக ஒத்துக்கொண்டுள்ளார். அவர் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.



