தல அஜித்தின் விஸ்வாசம் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. ஷூட்டிங் தள்ளிப்போனதால் தீபாவளிக்கு வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் ரிலீஸ் அடுத்த வருடத்திற்கு தள்ளிப்போனது.
விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் மிக விறுவிறுப்பாக நடந்த நிலையில் தற்போது அஜித் படத்திற்காக டப்பிங் பேச ஆரம்பித்துள்ளாராம்.
தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் மிக வேகமாக நடப்பதால் தல ரசிகர்களுக்கு பொங்கல் கொண்டாட்டம் விஸ்வாசத்துடன் தான் என்பது நிச்சயம்.



