#Gautham Vasudev Menon #Madhavan #Simbu
கௌதம் மேனனின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் விண்ணைத்தாண்டி வருவாயா.
சிம்பு, திரிஷா நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இப்படம் காதலர்களின் எவர்கிரின் பேவரைட்டாக உள்ளது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மாதவன் நடிக்கவுள்ளார். இதன் மூலம் கௌதம் மேனன் தன்னுடைய முதல் படமான மின்னலே நாயகனுடன் மீண்டும் இணைந்துள்ளார்.
சிம்புவின் திரைப்பயணத்தில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இல்லாததற்கு அச்சம் என்பது மடமையடா படத்தில் கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் தான் என கூறப்படுகிறது.
கதாநாயகி பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.


