ரஜினி – கமல் இணையும் படம்? – லோகேஷ் கனகராஜ் பதில்

கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள படம் தொடர்பான கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லையென்றால் ஏப்ரல் 9-ம் தேதி படம் வெளியாகி இருக்கும். தற்போது அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து, திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதில் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 50-வது படமாகும்.

இதனிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’ ஆகஸ்ட் 12-ம் தேதி டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதற்காக அளித்துள்ள பேட்டியில் “கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்தை இயக்கும் படம்…” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பதாவது:

“இப்போதைக்கு இது பற்றி நான் பதில் சொல்ல முடியாது. இன்னும் பேச்சுவார்த்தை தான் நடந்து வருகிறது. எதுவும் முடிவாகவில்லை. என் அடுத்த படத்தை எழுத ஆரம்பித்திருக்கிறேன். மற்ற விஷயங்களைத் தயாரிப்பு தரப்பு தான் சொல்ல வேண்டும். இன்னும் நேரம் இருக்கிறது என நினைக்கிறேன்”

இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles