நடிகர் கவின், நட்புனா என்னானு தெரியுமா? என்கிற திரைப்படத்திலும், சரவணன் மீனாட்சி மற்றும் பிக்பாஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்கள், நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர்.
இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடிக்கொண்டிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களுடன் பழகுவதும், தனக்கு ஏற்கனவே மூன்று வருட காதல் இருந்ததாகவும் லொஸ்லியாவிடம் கூறி நெருங்கி பழகி வருகிறார்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் கவினின் அம்மா சீட்டு கம்பெனி நடத்தி பணம் மோசடி செய்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
கடனை அடைக்க தான் பிக்பாஸ் வந்தாரா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு பிரச்சனையின் போது பேசுகையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் திருச்சியிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தோம். அப்போது எங்களுக்கு உறுதுணையாக நண்பர்கள் தான் உதவி செய்தார்கள்.
உறவினர்கள் யாரும் எங்களை கண்டு கொள்ளவில்லை எனக்கென்று சில கடன்கள் உள்ளது. அதை அடக்கத்தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன் இன்னும் ஒரு சில வாரங்கள் வந்தேன். பிக்பாஸ் வீட்டில் தங்கி விட்டால் அந்த கடனை அடைப்பதற்கான பணத்தை சம்பாதித்து விடுவேன் என்றும் கூறியிருந்தார்.
5 ஆண்டு சிறை தண்டனை
திருச்சி கே.கே நகர் பகுதியை சேர்ந்தவர் தமயந்தி. இவருடைய மகள் ராஜலட்சுமி மற்றும் மருமகள் ராணி. இதில், ராஜலட்சுமி என்பவர் நடிகரும் பிக்பாஸ் சீசன் போட்டியாளருமான கவினின் தாயார் ஆவார்.
தமயந்தியின் கணவர் அருணகிரி மற்றும் மகன் சொர்ண ராஜன் ஆகியோரும் அந்தப் பகுதியில் சீட்டு கம்பெனி ஒன்றை அனுமதி இல்லாமல் 1998 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நடத்தி வந்ததாக தெரிகிறது. இதில் 34 நபர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர்.
இவர்கள் யாருக்கும் கட்டிய பணத்தை திருப்பி தரவில்லை எனவும், தங்களுடைய பணம் 32,28,000 ஆயிரம் ரூபாயை தங்களுக்கு பெற்று தர வேண்டும் எனவும், கடந்த 2007 ஆம் ஆண்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும், அதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
மேற்படி வழக்கு விசாரணையில், கடந்த வாரம் சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. அதில் 31 பேர் குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியம் சொன்னார்கள். அதன் பின் நடந்த குறுக்கு விசாரணையில் இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், விசாரணைக்கு பிறகு தீர்ப்பளித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக 31 சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளதால், குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனால் குற்றவாளிகள் அனைவருக்கும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவாளிகள் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கவும், அந்தத் தொகையை வழக்கு தொடர்ந்த 2007ஆம் ஆண்டு முதல் 5 சதவிகித வட்டி விகிதம் கணக்கிட்டு ரூ.55.10 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். கட்டத் தவறினால் குற்றவாளிகளின் சொத்தைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஏற்கனவே காதல் சர்ச்சைகளில் சிக்கிய கவின் சின்னா பின்னமாகியுள்ளார். இதைத்தொடர்ந்து கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து சரவணன் மதுமிதா போன்றவர்கள் அதிரடியாக வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.



