தமிழ் சீரியல்களில் 1,2, 3 என்று ஒரே பெயரில் நிறைய பாகங்களாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் சரவணன்-மீனாட்சி.முதல் சீரியல் எவ்வளவு அழகாக ரசிகர்களின் உள்ளத்தை எப்படி கவர்ந்தது என்பது நாங்கள் சொல்ல தேவையில்லை. ஆனால் அடுத்தடுத்து வந்த பாகங்களால் அதே பெயரில் நாயகி மட்டும் மாறாமல் சரவணன்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் என்று மீம்ஸ்கள் நிறைய வந்தன. ஆனாலும் சீரியல் குழுவினர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் சீரியல் நாயகன் ரியோ ஒரு பேட்டியில், இப்போது ஒரு படம் கமிட்டாகியுள்ளேன். சீரியல் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.அதேபோல் சமீபத்தில் ரச்சிதா ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் பேசும்போது, எல்லாவற்றிற்கும் முடிவு உள்ளது, இந்த வருடமே சரவணன்-மீனாட்சி சீரியல் முடிந்துவிடலாம் என்று கூறியுள்ளார்.
இன் நிலையில் நடிகை ரச்சிதா சரவணன் மீனாட்சி சீரியலில் ஹீரோயினாக நடித்துவருகிறார். சமீபத்தில் அந்த தொலைக்காட்சி நடத்திய விருது விழாவில் அவருக்கு 1000 எபிசோடுகளை கடந்து தொடர்ந்து நடித்துவருவதற்காக ‘ஸ்பெஷல் டெடிகேஷன் விருது’ கொடுக்கப்பட்டது.
இது பற்றி பேசிய ரச்சிதா “சரவணன் மீனாட்சியால் நான் பல பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் விஷயங்களை சந்தித்துள்ளேன். இரண்டு வருடங்கள் பெஸ்ட் நடிகை என விருது கொடுத்தார்கள். ஆனால் இந்த வருடம் இத்தனை வருஷம் நடித்ததற்கு ஒரு விருது என கொடுத்துவிட்டார்கள். என்னை சென்ட் ஆப் செய்து அனுப்புவது போல எனக்கு தோன்றியது” என கூறியுள்ளார்.
மேலும் இந்த சீரியலை நானாக விட்டு செல்ல மாட்டேன், அவர்களாக முடிக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் விருது வழங்கும் விழாவில் இவர் பேசியது விஜய் டிவியில் ஒளிபரப்பபடுமா என்பது கேள்விக்குறிதான்



