தொலைக்காட்சி உதவி இயக்குநர் காந்தி தற்கொலை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அவர் தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக அவரது நிலானி கமிஷனர் அலுவகத்தில் மனு அளித்துள்ளார்.
தொலைக்காட்சி சீரியல் நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் இருவரும் காதலித்து வந்தார்கள். காந்தி நிலானியை திருமணம் செய்யவும் விரும்பினார். ஆனால் நிலானிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் போலீசில் புகார் அளித்தார். இதனால் மனம் உடைந்த காந்தி பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில், நிலானி, காந்தி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
இதையடுத்து போலீசுக்கு பயந்து நிலானி தலைமறைவாகியதாகவும், அவரது செல்போன் சுவிட்ஸ்ஆப் செய்து வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு வந்த நடிகை நிலானி, உதவி இயக்குநர் காந்தியின் தற்கொலைக்கு தான் காரணமல்ல என்றும், காந்தி தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாகவும் புகார் மனு அளித்துள்ளார்.



