பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் வெளியேற்றத்திற்குப் பின்பு விறுவிறுப்பாக செல்லவில்லை. ஆனால் இன்றைய தினத்தில் மீராவை வைத்து பிரச்சினை வரும் என்பது ப்ரொமோ மூலம் தெரியவந்துள்ளது.
இன்றைய நாளின் முதல் ப்ரொமோ காட்சியில் பிக்பாஸ் டாஸ்க் ஒன்றினைக் கொடுத்துள்ளார். அதனை சாண்டி, மீரா செய்கின்றனர். சிறிது நேரத்தில் கவின் மீராவைக் குற்றப்படுத்தி பேசுகிறார் இதற்கு மீரா கடும் கோபமாக காட்சியளிக்கிறார்.
இரண்டாவது காட்சியில் தான் அழுதால் பெண்களை மட்டுமே கட்டிப்பிடித்து ஆறுதல் தேடிக்கொள்ளும் மோகன் வைத்தியா சாக்ஷியிடம் தன்னால் பாத்ரூம் வேலையை செய்யமுடியவில்லை என்று கூறுகிறார். அவரிடம் சரி என்று கூறிய சாக்ஷி பின்னே போய் என்ன கூறுகிறார் என்பதை நீங்களே பாருங்க…
மூன்றாவது ப்ரொமோ காட்சியில் மீராவிற்காக போட்டியாளர்கள் மீட்டிங் ஒன்று வைக்கப்படுவதாகவும், கடைசியில் தனக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று மீரா ஒதுங்கிவிடுகிறார். அதற்கு பொங்கி எழுந்த சாக்ஷியின் கோபக் காட்சி இதோ…



