நான் யாருமில்ல என்று சொல்லி முன்னணி நடிகர்களை கலாய்த்த சிவா

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா – ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2′ படத்தின் பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `தமிழ்படம் 2′. சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சிவா நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

ரசிகர்களை கவர இப்படக்குழுவினர் புதுப்புது அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள். சினிமா, அரசியல் என பல்வேறு அட்ராசிட்டிகளையும் கலாய்த்து போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இதுவரை வெளியான போஸ்டர்கள் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தில் இருந்து பாடல் ஒன்று இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக இயக்குநர் சி.எஸ்.அமுதன் அறிவித்திருக்கிறார். அதன்படி ‘நான் யாருமில்ல…’ என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார்கள்.

சிவாவின் அறிமுகப்பாடலாக கூறப்படும் இதில், முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன், விஷால் உள்ளிட்ட பலரை கலாய்க்கும் படி இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் படம் வருகிற ஆகஸ்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles