நடிகர் விவேக்கிற்கு உயிர் காக்கும் சிகிச்சை! எக்மோ என்பது என்ன? எதற்காக இந்த சிகிச்சை?

மாரடைப்பினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் விவேக்கிற்கு தற்போது எக்மோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விவேக் நெஞ்சு வலி காரணமாக இன்று காலை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கார்டியாக் நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ரசிகர்கள் பிரபலங்கள் அனைவரும் தங்களது பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தீவிர சிகிச்சை பெற்று வரும் விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்ட நிலையில், அதில் எந்தவொரு முன்னேற்றம் ஏற்படாததால், இதயம், நுரையீரல் இயங்குவதற்கு தற்போது எக்மோ(Extracorporeal membrane oxygenation) சிகிச்சையினை அளித்து வருகின்றனர்.

இந்த எக்மோ சிகிச்சையே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எக்மோ சிகிச்சை என்றால் என்ன?

’Extracorporeal membrane oxygenation’ என்பதன் சுருக்கமே எக்மோ ஒருவரின் நுரையீரல் அல்லது இதயம் செயலிழந்த பிறகு இதன் செயல்பாடுகளை வெளியில் இருந்து செய்யும் கருவியே எக்மோ ஆகும்.

காற்றில் உள்ள ஆக்சிஜனை பிரித்து ரத்தத்தில் ஏற்றுவதே மனித நுரையீரலின் செயல்பாடு. அதே போன்று ஆக்சிஜன் ஏற்றிய ரத்தத்தை உடல் முழுவதும் கொண்டு செல்வதே இதயத்தின் செயல்பாடு.

ஆனால், பல்வேறு காரணங்களால் நுரையீரல், இதயம் செயலிழக்கும் பட்டத்தில் இது நடைபெறாமல் போனால் உடலில் கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

கொரோனா வைரசானது மனித உடலில் புகுந்த உடன் ரத்தத்தில் கட்டித்தன்மையை அதிகரித்து நுரையீரலையும் இதயத்தையும் பாதிப்பை ஏற்படுத்துக்கின்றது.

இதனால் உடல் உறுப்புகளுக்கு நல்ல ரத்தம் செல்லாமல் ஹேப்பாக்சியா நிலை ஏற்படுகின்றது. அது போன்ற நேரங்களில் நுரையீரல் மற்றும் இதயத்தின் செயல்பாடுகளை செய்ய எக்மோ கருவி பொருத்தப்படும்.

உடலில் உள்ள கார்பன்டை ஆக்சைடு உள்ள ரத்தத்தை எடுத்து ஆக்சிஜன் ஏற்றிய ரத்ததை உடலில் ஏற்றும் இந்த நடைமுறையை நுரையீரலை இதயத்தை மீட்டுக் கொண்டு வரும் வரை பயன்படுத்த முடியும்; ஆனாலும் இந்த சில நாட்கள் ஒரு மாதம் வரை தான் வைத்திருக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles