பெண்களுக்கு பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம்.
மும்பையை சேர்ந்த 37 வயது நடிகை ஒருவர் அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள ஜிம்மிற்க்கு தினமும் செல்வது வழக்கம். அவர் வரும் அதே நேரத்தில் விஸ்வநாத் ஷெட்டி என்பவரும் வருவார்.
NCP கட்சியை சேர்ந்த பிரமுகரான இவர் அந்த நடிகைக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தன் ஆசைக்கு இணங்கும்படி பலமுறை அந்த நடிகையை கேட்டுள்ளார். அவர் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். இருப்பினும் போனில் ஆபாசமாக மெசேஜ்களை
பிப்ரவரி 13ம் தேதி அந்த நடிகையிடம் விஸ்வநாத் ஷெட்டி பேச முற்பட்ட போது அவர் நிற்காமல் சென்றுவிட்டார், பின்னர் அவரை தடுத்து நிறுத்து தகாத முறையில் நடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியான அந்த நடிகை போலீசில் புகார் அளித்தார். அன்று முதல் விஸ்வநாத் ஷெட்டி தலைமறைவாகிவிட்டார். அவர் கர்நாடகாவில் பதுங்கி இருப்பதாக தெரிந்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.



