ஸ்ரீதேவி மகள் ஜான்வி. தாயை இழந்த சோகம் ஒரு புறம் இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு தனது முதல்படமான ‘தடக்’ திரைப்படத்தில் முழுகவனம் செலுத்தி நடித்துள்ளார். இதற்கிடையில் அவ்வப்போது பொருட்கள் வாங்குவதற்காக மால்களுக்கு செல்கிறார். அப்போது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். அவரும் டாட்டா காட்டிவிட்டும் ஹாய் சொல்லிவிட்டும் செல்கிறார்.
நேற்று மும்பையில் ஒரு ஓட்டலுக்கு ஜான்வி சென்றார். அவர் செல்வதை சில சிறுவர்கள் பார்த்தனர். ஓட்டலுக்கு வெளியில் அவர்கள் கூடி நின்று ஜான்வி வரவுக்காக காத்திருந்தனர். சில இளைஞர்களும் சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டனர். ஓட்டலிலிருந்து ஜான்வி வெளியில் வந்தார். அவரைக் கண்டதும் சிறுவர்கள் துள்ளி குதித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். அவர்களுடன் ஜான்வி அன்பாக பேசினார்.
அப்போது யாரோ தன்னை தொடுவதை உணர்ந்து திடுக்கிட்டார் ஜான்வி. சிறுவர்கள் கூட்டத்துடன் நின்றிருந்த குறும்புக்கார இளைஞர் இந்த செயலில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார் ஜான்வி. உடனே பாதுகாவலர்கள் ஜான்வியை கூட்டத்திலிருந்து மீட்டனர். ஜான்வியிடம் சில்மிஷம் செய்த இளைஞரை பாதுகாவலர்கள் எச்சரித்து அனுப்பினர்.



