பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சமீபத்தில் கேரளாவில் நடந்த இசை விழா ஒன்றில் பங்கேற்றார். அவர் மேடைக்கு வந்ததும் உடன் வந்திருந்த இசை அமைப்பாளர் ஸ்டீபன் தேவஸி மரியாதை நிமித்தமாக பாடகர் எஸ்.பி.பி காலை தொட்டு வணங்கினார். ஆனால் எஸ்.பி.பி தானும் குனிந்து அவர் தனது காலை தொட்டு வணங்காதபடி தூக்கி தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். பிறகு, ‘உலக அளவில் பெயர் பெற்றிருப்பவர் ஸ்டீபன். அவரது எதிர்காலம் பிரகாசமாக அமைய வாழ்த்துகிறேன்’ என்றார்.
பின்னர் பின்னணி பாடகி சித்ரா மேடைக்கு வந்தார். அவரும் எஸ்.பி.பி காலை தொட்டு வணங்க முயன்றார். உடனே அதை தடுத்த எஸ்.பி.பி,, ‘தயவுசெய்து இதுபோல் செய்யாதீர்கள். சித்ரா போன்ற பாடகிகளால் கேரளாவே பெருமை அடைகிறது. அவரது எளிமையை நான் எப்போதுமே மதிப்பவன்’ என்றார். பின்னர் எஸ்.பி.பியும், சித்ராவும் இணைந்து பிரபலமான மலையாள பாடல் ஒன்றை பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.



