ஜுங்கா, கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடிக்கும் சாயிஷா சைகல், தமிழுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பாராம். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகள் வந்தால் நடிக்கத் தயாராக இருக்கும் அவர், ‘என் சின்ன வயதிலிருந்தே தீவிர நடனப் பயிற்சி பெற்றதாலோ என்னவோ, சினிமா ஷூட்டிங்கில் எவ்வளவு பெரிய நடன அசைவாக இருந்தாலும், சிரமமின்றி என்னால் ஆட முடிகிறது.
முழுமையான நடனம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க ஆசை. சுதா சந்திரன் நடித்த மயூரி படத்தைப் போல், நடனத்துக்கு அதிக முக்கியத்துவம் இருக்க வேண்டும்’ என்ற அவர், மும்பையில் சொந்த நடனப் பள்ளி தொடங்க திட்டமிட்டு இருக்கிறார். அதுபற்றி விரைவில் அவர் அறிவிக்க உள்ளார்.



