நடிகை அமலா பால் அண்மையில் சொகுசு கார் வாங்கிய விசயத்தில் வரி மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தது. இந்த வழக்கும் ஒரு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
கல்யாணம், விவாகரத்து என சில நிகழ்வுகள் அவருக்கு வந்து போனாலும் தமிழ் படங்கள், மலையாளம் சினிமா என பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
சில நடிகைகள் ஹிந்திக்கு போனாலும் இவருக்கு என்னவோ இப்போது தான் ஆஃபர் அடித்திருக்கிறது. நரேஷ் மல்ஹோத்ரா இயக்கும் படத்தில் அர்ஜூன் ராம்பாலுக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.
பல நடிகைகள் இதன் போட்டோ ஷூட்டில் கலந்துகொண்டாலும் கடைசியாக அமலா பால் தான் ஓகே ஆகியிருக்கிறார். இதனால் அவரது நட்பு வட்டாரங்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.



