பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட சரவணன் பற்றிய பேச்சுதான் தற்போது சமூகவலைத்தளத்தில் அதிக பேசு பொருளாக உள்ளது.
இதற்கான காரணத்தினை பிக் பாஸ் நேற்று அறிவித்திருந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் சரவணன் கல்லூரி காலத்தில் படிக்கும்போது உரசுவதற்காகவே பேருந்தில் சென்றதாக கூறியிருந்தார். இது அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.
இதனால் சரவணனை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க சொன்னர் பிக் பாஸ். நீங்கள் பெண்கள் குறித்து பேசிய விடயம் மிகவும் கண்டிக்கப்படுகிறது. நீங்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அவரும் மன்னிப்பு கேட்டார். இது அனைவரும் அறிந்த விடயமே. இந்நிலையில் இத்தனை நாட்கள் கழித்து அவரை வெளியேற்ற என்ன காரணம் என்று பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சரவணன் வெளியேறியதற்கு சேரன் தான் காரணம் என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் சரவணன் மற்றும் சேரன் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது.
இதனால் கடந்த சனிக்கிழமை கமல், சரவணன் செய்தது தவறு என்று அறிவுறுத்தினார். அதன் பின்னர் சரவணன், சேரனிடம் மன்னிப்பும் கேட்டார்.
இந்த நிலையில் சரவணன் நேற்று திடீரென்று வெளியேற்றப்பட்டுள்ளார். சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு சேரன் தான் காரணம் என்றும் கூறப்படுகின்றது. இது எந்த அளவு உண்மை என்றும் தெரியவில்லை.
அது மாத்திரம் இன்றி, சேரனுக்கு எதிராக சரவணன் பேசிய போது, சேரனுக்கு ஆதரவாக பல்வேறு பிரபலங்களும் கருத்து வெளியிட்டு வந்தனர். சேரனை நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வருமாறும் கூறியிருந்தனர். ஆனால் சற்று திருப்பமாக சரவணன் வெளியேற்றப்பட்டுள்ளார்.
சேரனுடன் சண்டை போட்டமையினால் இயக்குநர்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தியே இவ்வாறு சரவணன் வெளியாற்றப்பட்டமைக்கு உண்மை காரணம் என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை, பிக் பாஸ் வரலாற்றில் இது வரை யாரும் அப்படி வெளியேற்றப்பட்டது கிடையாது. இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.



