சினிமா உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54. ஸ்ரீதேவியின் மரண செய்தியால் திரையுலகினரும் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினர். நடிகை ஸ்ரீதேவியின் மரணத்துக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், என பலரும், தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். துபாய் ஓட்டலில் குளியல் தொட்டியில் மூழ்கி நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்துள்ளதாக உடற்கூறாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி விழுந்துள்ளார். இதனால் குளியல் தொட்டியிலேயே மூச்சு திணறல் ஏற்பட்டு ஸ்ரீதேவி உயிர் பிரிந்துள்ளது. மேலும் ஸ்ரீதேவியின் ரத்த பரிசோதனையில் அவர் மது அருந்தியதும் தெரிய வந்துள்ளது. ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என்று உடற்கூறு ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு குளியல் தொட்டியில் மூழ்கியதால் தான் மரணம் ஏறபட்டுள்ளதாக உடற்கூறாய்வு தெரிவித்துள்ளது.



