சிலந்தி, கன்னடத்தில் ரணதந்த்ரா ஆகிய படங்களுக்குப் பிறகு ஆதிராஜன் எழுதி இயக்கும் படம், அருவா சண்ட. தரண் இசையில் வைரமுத்து எழுதி அனுராதா பட் பாடிய, ‘ஆற்றில் ஒரு மீனாக காட்டில் ஒரு மானாக’ என்ற பாடல் காட்சி, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் படமாக்கப்பட்டது. ஹீரோயின் அறிமுகப் பாடலான இதில், கிளாமர் உடைகள் அணிய முடியாது என்று மாளவிகா மேனன் மறுத்தார்.
‘இந்த பாட்டுல நீங்க கொஞ்சம் கவர்ச்சியா தெரியணும்னு ஏற்கனவே நான் சொல்லியிருந்தேன். ஆனா, இப்ப வந்து மாட்டேன்னு சொல்றீங்களே, ஏன்?’ என்று இயக்குனர் கேட்க, ‘நீங்க சொன்னதை விட, இந்த டிரஸ் ரொம்ப சின்னதா இருக்கு. இதுவரை இந்தமாதிரி டிரஸ் போட்டுக்கிட்டு நான் ஆடியதில்ல’ என்று மாளவிகா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
இதனால் ஒரு மணி நேரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பிறகு நடன இயக்குனர் ராதிகா, மாளவிகாவிடம் பேசினார். ஆனாலும் மாளவிகா சம்மதிக்கவில்லை. இறுதியில் வேறு சில உடைகளை வெட்டி அதில் தைத்துக் கொடுத்தனர். அதற்குப் பிறகு சமாதானம் அடைந்த மாளவிகா, அருவியில் நனைந்தபடி ஆடினார் என்று படக்குழு கூறியது.



