கருப்பாக இருப்பதால் கவலையா?… இந்த ஒரு காய் போதும் உங்களை கலராக மாற்றுவதற்கு

0
642

உடல் நலத்திற்கு மட்டுமல்ல சரும அழகையையும் அள்ளிக் கொடுக்கும் ஒரு பொருள் தான் இந்த பீட்ரூட். எப்படிப்பட்ட சரும பிரச்சினைகளையும் ஒரு நொடிப் பொழுதில் நீக்கி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி விடும்.

இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு தேவையான போதுமான ஈரப்பதத்தை கொடுத்து முகத்தை பட்டு போல் ஜொலிக்க வைத்திடும். இதற்கு பீட்ரூட் உடன் லெமன் ஜூஸ், தேன், கற்றாழை ஜெல், அரிசி மாவு சேர்த்து பேஸ் பேக் தயாரித்து வந்தால் நல்ல அழகான முகத்தை பெறலாம்.

பீட்ரூட்
நமது உடலை பராமரிப்பது மட்டுமல்ல அழகையும் சேர்த்து பராமரிப்பது மிகவும் முக்கியம். அப்படி இருக்கையில் உடல் நலத்திற்கு மட்டுமல்ல சரும அழகையையும் அள்ளிக் கொடுக்கும் ஒரு பொருள் தான் இந்த பீட்ரூட். எப்படிப்பட்ட சரும பிரச்சினைகளையும் ஒரு நொடிப் பொழுதில் நீக்கி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி விடும்.

இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு தேவையான போதுமான ஈரப்பதத்தை கொடுத்து முகத்தை பட்டு போல் ஜொலிக்க வைத்திடும். இதனுடன் சில பொருட்களை சேர்த்து பேஸ் பேக் போட்டு பாருங்கள் அப்புறம் என்ன ஒரு நொடிப் பொழுதில் உங்கள் அழகை கண்ணாடியில் காணலாம்.

பீட்ரூட் மற்றும் லெமன் பேஸ் பேக்ssss |
1 டீ ஸ்பூன் பீட்ரூட் ஜூஸ் மற்றும் 1/2 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளுங்கள். இதில் காட்டன் பஞ்சை நனைத்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

பீட்ரூட் மற்றும் கற்றாழை ஜெல் பேஸ் பேக்
பீட்ரூட் துருவலுடன் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேருங்கள். இதை முகத்தில் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். 10-15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த மற்றும் சூடான நீர் கலந்த கலவையில் கழுவுங்கள். ஒரு வாரத்திற்கு இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமம் ஈரப்பதத்துடன் முகம் நல்ல நிறத்தையும் பெறும்.

பீட்ரூட் மற்றும் அரிசி மாவு பேஸ் பேக்
2 டீ ஸ்பூன் அரைத்த பீட்ரூட் கலவை 1/2 டீ ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும் முகம் மற்றும் கழுத்தில் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். 15 நிமிடங்கள் காய விட்டு லேசான க்ளீன்சர் மற்றும் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவவும். ஒரு மாதத்திற்கு 3-4 தடவை இதை செய்து வந்தால் இளமையான தோற்றத்தை பெறலாம்.