தற்போது இல்லத்தரசிகளின் மனம் கவர் கதாப்பாத்திரமாக உலா வரும் நடிகை ரேவதியின் வாழ்க்கையில் இருந்து பலர் கற்று கொண்டிருந்தாலும், அவரின் கண்ணீர் பக்கங்கள் பலருக்கு தெரியாத உண்மைதான்.
நடிகை ரேவதி பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

இவர் தமிழ்ப் படங்கள் மட்டும் இன்றி இந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.
உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..
ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களை இயக்கி, பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர், சினிமாத்துறை சார்ந்தவற்றில் பல்வேறு தேசிய விருதுகள் வரை பெற்று சாதனைகள் படைத்திருந்தாலும். திருமண வாழ்க்கையில் தோல்வியைப் பெற்று விட்டார். இதுதான் அவரின சோகமான வாழ்க்கை பக்கம் என்று கூட கூறலாம்.

ஆனால் இவர்களுடைய திருமண பந்தம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வில்லை என்பது தான் வருத்தம்.

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்
இந்நிலையில் ரேவதி கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு பெண்குழந்தையை தத்து எடுத்தார். அவருக்கு மகி என்று பெயர் சூட்டியுள்ளார்.
ரேவதி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தாலும் ஒரு சில வருடங்களாக மீண்டும் தன்னுடைய கணவருடன் நட்பு ரீதியாகப் பழகி வருகிறாராம்.
பலருக்கு ரோல் மாடலாக இருக்கும் ரேவதிக்கு… எல்லாம் கிடைத்தும் மண வாழ்க்கை கசப்பானதாக மாறிவிட்டது.
இதுவே இன்று வரை அவர் கண்ணீருக்கும் காரணமாக இருந்து வருகிறது என அவருடைய நட்பு வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.
அது ஒரு புறம் இருந்தாலும் தற்போது பல சீரியல்களில் நடித்து தனது திறமைகளை வெளியுலகிற்கு நிறுபித்த வண்ணமே உள்ளார்.
தற்போது, இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்தவராகவும் அவர் காணப்படுகின்றார்.


