நடிகை சினேகாவின் வாழ்க்கை ஏனைய நடிகைகளுக்கு எடுத்து காட்டாக காணப்படுகின்றது என்று கூறினால் மிகையாகாது.
காதல் கணவர் பிரசன்னாவிற்கு மிக சிறந்த ஏணியாக இன்று வரையும் இருக்கிறார். அது மட்டும் இல்லை குடும்பம் மற்றும் நடிப்பு, நடனம் என்றும் இன்றும் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்கு பற்றி காதல் அனுபங்களை இருவரும் பகிந்து கொண்டனர்.

இதன்போது, பிரசன்னா- சினேகாவின் காதல் வாழ்கை எல்லோரையு
ம் மெய் சிலிர்க்க வைத்துள்ளது. வாழ்கையில் துன்பம் வரும் போது எல்லாம் சினேகாவை நினைத்தால் புது நம்பிகை வருவதாக பிரசன்னா குறிப்பிட்டிருந்தார்.
இது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கே.ஆர். விஜயாவுக்கு பிறகு புன்னகை இளவரசி பட்டத்திற்கு மிக பொருத்தமானவர் நடிகை சினேகா.
அவர் சிரித்தால் அவ்வளவு அழகாக இருக்கும் நாள் முழுக்க பார்த்து கொண்டே இருக்கலாம். இவர் வாழ்ககையிலும் கசந்து போன நாட்கள் இருந்தன.
நடிகை சினேகா ஒரு வருட காலம் சினிமா வாய்ப்பு இன்றி வீட்டிலேயே முடங்கி இருந்தார். பின்னர் கமலுடன் ஜோடி சேர்ந்த உடன் கமல் தலையீடு காரணமாக வாய்ப்புகள்

குவிய ஆரம்பித்தது.
சினேகா முதலில் மலையாளத்தில் இங்கனே ஒரு நீல பாக்ஷி என்ற படத்தில் நடனமாடி நடித்துள்ளார்.
பின்னர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தினார். என்னவளே படத்தில் நடித்து புகழ் பெற தொடங்கினார். மம்மூட்டியுடன் ஆனந்தம் படத்தில் நடித்தார்.
இப்படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்து புகழ் பெற்றார். இதற்கு தமிழ்நாடு சிறந்த நடிகை விருது கிடைத்தது .
தொடர்ந்து புன்னகை தேசம் , உன்னை நினைத்து, விரும்புகிறேன் ஆகிய படங்களில் விருது பெற்றார். பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் என்று சுமார் எழுபது படங்களில் நடித்துள்ளார்.
2009 இல் சினேகா முதல் முறையாக பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்தார். பின்னர், பிரசன்னா சினேகா-வின் மாடலிங் நிகழ்ச்சிகளில் காணப்பட்டார்.
ஊடகங்களில் அதை வதந்தியாக மறுத்த போதிலும் நவம்பர் 9, 2011 அன்று பிரசன்னா தனது காதலை உறுதிப்படுத்தி மே 11, 2012 இல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
2015 ஆகஸ்ட் 10 இல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது . தற்போது சினேகா சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார்.
சில நிகழ்ச்சிகளில் மட்டும் நடுவராக இருந்து வந்த நிலையில் சிவகார்த்திகேயன் படத்தில் மீண்டும் தமிழ் சினிமாவில் தலைக்காட்டினார்.
கடந்த வருட இறுதியில் வெளியான வேலைக்காரன் படம் அவருக்கு ஒரு புதிய பாணியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. பொருத்திருந்து பார்ப்போம் இந்த இடத்தை தக்க வைத்து கொள்வாரா இல்லையா என்பதை…

