எம்ஜிஆர் வாழ்க்கை படத்தில் ஜெயலலிதா யார்? இயக்குனர் பதில்

காமராஜர் வாழ்க்கை வரலாறை காமராஜ் பெயரில் திரைப்படமாக இயக்கியவர் அ.பாலகிருஷ்ணன். அடுத்து எம்ஜிஆர் வாழ்க்கை சரித்திர படத்தை தயாரித்து இயக்குகிறார். இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இதுபற்றி இயக்குனர் கூறியது: ஆணையடி பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார் எம்ஜிஆர். வறுமையால் அவரது கல்வி தடைபட்டதையடுத்து நாடக கம்பெனியில் சேரும் நிலை ஏற்பட்டது. அந்த நாடக கம்பெனி முதலாளி எம்ஜிஆரின் சிறுவயது தோற்றத்தை கண்டு, ‘சிறுவன் தங்க விக்ரகம் போல் இருக்கிறான்’ என கூறினாராம்.

எனவே எம்ஜிஆரின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு நடத்தி அத்வைத் என்ற சிறுவன் தேர்வு செய்யப்பட்டு எம்ஜிஆரின் பால்யகால வேடத்தில் நடிக்கிறான். எம்ஜிஆரை போன்றே தோற்றம் கொண்ட நடிகர் சதீஷ்குமார், எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எம்ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்துலுவாக ஒய்.ஜி.மகேந்திரன், சக்ரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், எம்ஜிஆர் உயிர் தொண்டனாக வையாபுரி நடிக்கின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் கதாபாத்திரங்களில் நடிக்க பொருத்தமான நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. விரைவில் தொடங்கவிருக்கும் அடுத்த கட்ட படப்பிடிப்பில் எம்ஜிஆர் மனைவி ஜானகியாக ரித்விகா நடிக்க உள்ளார். ஏ.எம்.எட்வின் ஒளிப்பதிவு செய்கிறார். திரைக்கதை, வசனத்தை செம்பூர் ஜெயராஜ் எழுதுகிறார். எஸ்.பி.அகமதி எடிட்டிங் செய்கிறார். இவ்வாறு இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறினார்

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles