அஜித் படங்களை பற்றி இப்போது ரசிகர்களிடம் கேட்டால் நிறைய விஷயங்கள் கூறுவார்கள். ஆனால் அதையே அவருடைய பழைய படங்கள் பற்றிய விவரங்கள் கேட்டால் சரியாக தெரியாது, காரணம் இப்போது இருக்கும் தொழில்நுட்பம் அப்போது இல்லை.
அவருடன் பணிபுரிந்தவர்கள் கூறினால் தான் உண்டு. அப்படி அஜித்தை உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என்ற படத்தை இயக்கிய விக்ரமன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, இந்த படத்தில் அஜித்தை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன்.
அவரிடம் சென்று கதை கூற தயாரானால், சார் உங்கள் மேல் எனக்கு மரியாதை இருக்கிறது. நீங்கள் என்னை வில்லனாக காட்டினாலும் கண்டிப்பாக நடிக்கிறேன் என்றாராம்.



