உங்கள் மணிக்கட்டு இந்த மாதிரி இருக்கா: அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க

உள்ளங்கையை வைத்து மட்டுமல்ல மணிக்கட்டு ரேகை வைத்தும் ஒருவரது ஆரோக்கியம், வாழ்க்கை, ஆயுள், தொழில் ரீதியான தகவல்கள் மற்றும் உறவுகள் குறித்தும் கூறலாம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இனி, மணிக்கட்டு வரிகள் எப்படி உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்பதை காணலாம்….

உள்ளங்கை மற்றும் கையை இணைக்கும் ஆங்கிலத்தில் Bracelet Lines / Rascette lines என்று சொல்லக் கூடிய வரிகளைக் கொண்டு தான் நாம் நம் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை அறிய போகிறோம்.

இது மெட்டாபிசிக்ஸ் (metaphysics) என்று கூறப்படுகிறது.

முதலில் மணிக்கட்டில் உள்ள வரிகளின் எண்ணிக்கையைப் பற்றி பார்க்கலாம்.

உங்கள் மணிக்கட்டில் உள்ள வரிகளை எண்ணி பார்க்கும் பொழுது,

1 வரி – ஆயுளின் காலம் 25 முதல் 35 எனவும்,

2 வரிகள் – ஆயுளின் காலம் 45 முதல் 57 எனவும்,

3 வரிகளுக்கு மேல்- ஆயுளின் காலம் 85 வயதுக்கு மேல் என்றும் கூறப்படுகிறது.

இதில் பெரும்பாலனவர்களுக்கு 2 முதல் மூண்ரு வரிகளே இருக்கும். மிகவும் அரிதானவர்களுக்கு மட்டுமே 1 அல்லது 4 வரிகள் காணப்படும்.

முதல் வரி

1st-line-thinatamil
1st-line-thinatamil

இந்த வரியானது மிகவும் தெளிவாகவும், பிரிவு, நெளிவு சுளிவு இல்லாமலும் இருந்தால் மிகுந்த ஆரோக்கியத்துட இருப்பீர்கள்.

அவ்வாறு இல்லாமல், பிரிவுடன் இருந்தால் அந்த நபரானவர், பொறுப்பற்று, சகிப்புத் தன்மை மிக்கவராகவும் இருப்பார்.

இந்த வரியானது ஆண்களுக்கும், பெண்களுக்கும் மாறுபட்டதான பலனை கொடுக்கும்.

ஆண்களுக்கு, இந்த முதல்வரி நெளிவு, சுளிவுடனும், பிரிவுடனும் இருக்குமேயானால், அவர் சிறுநீர், புரோஸ்டேட் மற்றும் இனப்பெருக்க குறைபாடுகள் உள்ளவராக இருக்கலாம்.

பெண்களுக்கு, இவ்வாறு நெளிவு, சுளிவுடன் இருந்தால், அவர்களுக்கு மகளிர் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இது மட்டுமல்லாது கருத்தரிக்கும் தருணத்திலும் அவர்களுக்கு சற்று சிரமம் ஏற்படும்.

இரண்டாவது வரி

second-line-thinatamil
second-line-thinatamil

இரண்டாவது மணிக்கட்டு வரியானது தெளிவாக இருப்பது, செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவை மிகுந்து இருப்பதைக் குறிக்கும்.

மேலும், அந்த நபரானவரின் உடல்திறன் நன்றாகவும், வாழ்க்கை சிறப்பாகவும், இருக்கும்

அதே சமயம், பிரிவுகள் இருந்தால் சற்று தடங்கல்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மூன்றாவது வரி

third-line-thinatamil
third-line-thinatamil

இந்த வரியானது, உங்கள் வேலை மற்றும் தொழில் ஆகியவற்றைக் குறிப்பது.

இந்த வரியானது, பிரிவு மற்றும் நெளிவு சுளிவுடனும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அந்த நபரானவர் தான் செய்யும் தொழிலில் எப்போதும் ஏறுமுகத்தையே காணப்படுவார் என்று சொல்லப் படுகிறது.

அதேசமயம், முதல் வரி தடித்தும், இரண்டாவது மூன்றாவது வரி சற்று மெல்லிசாகவும் இருந்தால் அந்த நபர் குழந்தை பருவத்தில் செழிப்பாகவும், நடுவயதில் சற்று பின்தங்கி

மேலும், கடைசியில் மீண்டெழுந்து வரும் நபராக இருப்பார் என குறிப்பிடப்படுகிறது.

நான்காவது வரி

forth-line-thinatamil
forth-line-thinatamil

மேலே குறிப்பிட்டது போலவே இந்த வரியானது மிகவும் அரிதானவர்களுக்கு மட்டுமே இருக்கக் கூடும்.

இந்த வரியானது, மூன்றாவது வரிகளுக்கு இணை வரி போல இருப்பதால் உங்கள் தொழில் மற்றும் வேலை ரீதியான செயல்பாடுகளுக்கு வலுவளிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், இவ்வாறு நான்கு வரிகள் இருப்பவர்கள் தன் சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வார்களேயானால் இறக்கும் தருணம் வெளிநாட்டில் மரணம் அடையலாம் என்றும் கூறுகிறார்கள்.

மேலும், ஒருவரது மணிக்கட்டு வரிகளில் கொக்கி போன்ற குறி ஏதேனும் இருக்கிறது எனில், அவருக்கு ஆளுமை திறன் அதிகம் இருக்கும் எனவும் சங்கிலி போன்ற தோற்றம் இருந்தால், அந்த நபரின் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles