ஆஸ்திரேலியா பாய்பிரண்ட் ஆன்ட்ரூ நியூபோன் கணவனா? காதலனா? டென்ஷனில் இலியானா

நண்பன், கேடி உள்ளிட்ட தமிழ் மற்றும் பல்வேறு தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் இலியானா. தற்போது இந்தி படங்களில் நடிக்கிறார். மீண்டும் தென்னிந்திய படங்களில் வாய்ப்புக்காக வலை வீசி உள்ளார். ஆனால் புதிய பட வாய்ப்பு எதுவும் கைகூடவில்லை. இதற்கிடையில் தனது இணையதள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி படங்கள், டாப் லெஸ், நிர்வாண படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்து கொண்டிருக்கிறார். இந்த புகைப் படங்களை அவரது காதலன் ஆன்ட்ரூ நியூபோன் எடுத்து குவிக்கிறார்.

இருவரும் நெருக்கமாக பழகுவதுடன் காதலர்களாகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் பரவியது. ஒருமுறை இலியானாவே ஆன்ட்ரூ பற்றி ஒரு மெசேஜில் குறிப்பிடும்போது எனது கணவர் என்ற அர்த்தம் வரும் வகையில் தெரிவித்திருந்தார். அஜய் தேவ்கனுடன் இலியானா நடித்திருக்கும் புதிய படம் ரெய்ட். இதன் புரமோஷன் நிகழ்ச்சிகள் மும்பையில் நடக்கிறது.

அதில் கலந்துகொள்ள இலியானா வந்தார். முன்னதாகவே அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம், ‘இலியானாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரும் கேள்வி கேட்கக்கூடாது’ என்று கண்டிஷன் போட்டனர். பேட்டி தொடங்கி சில நிமிடங்களுக்கு பிறகு இலியானாவிடம் அவரது காதல் வாழ்க்கை மற்றும் திருமணம் ஆகிவிட்டதா? என்று இடைவிடாமல் கேட்டனர். இதில் கடுப்பான இலியானா, ‘நீங்கள் இணைய தளத்தில் என்னைப்பற்றி என்ன பார்க்கிறீர்களோ அதையே உங்களுக்கு பதிலாக வைத்துக்கொள்ளுங்கள்.

அதைப் பார்த்து உங்களுக்கு என்ன புரிதல் வருகிறதோ அதை நான் மறுக்கவில்லை. அதேசமயம் ஆமாம் என்றும் சொல்லவில்லை. எனது கடந்த காலம், எனக்கான உறவு எப்படி மலர்ந்தது என்பதுபற்றி பொதுவெளியில் சொல்ல இஷ்டமில்லை. எதையும் நான் மறைக்கவில்லை. எதையும் மறுக்கவும் இலலை. எல்லாமே எல்லோர் பார்வைக்கும் கிடைக்கிறது. அதுபற்றி என்னிடம் சரமாரியாக கேள்வி கேட்காதீர்கள். காலநேரம் வரும்போது அதுபற்றி நானே தெரிவிப்பேன்’ என்றார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles