அமைதி கொள் அன்பே ! நீ இல்லாத வாழ்க்கை எப்படி இருக்குமோ? – போனி கபூர் உருக்கம்

நடிகை ஶ்ரீதேவி கடந்த சில நாட்களுக்கு முன் துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தபோது அங்குள்ள குளியலறை தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டதும் இந்திய திரையுகலமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. அவருடைய உடலுக்கு நேற்று அரசு மரியாதையோடு இறுதி சடங்கு நடைபெற்று அடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவருடைய கணவர் போனி கபூர் உருக்கமான கடிதத்தை ஶ்ரீதேவியின் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார், அது பின்வருமாறு,

போனி கபூர் – ஶ்ரீதேவி

“ஒரு உற்ற தோழியை, மனைவியை, இரு பெண் குழந்தைகளின் தாயை இழந்து நிற்கும் சோகத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
குடும்பத்தார், நண்பர்கள், எங்கள் நலம் விரும்பிகள், ஶ்ரீதேவியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் என எல்லாருக்கும் என் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த தருணத்தில் எனக்கும் என் மகள்களுக்கும் உறுதுணையாக இருக்கும் அர்ஜுன் மற்றும் அஷூலாவின் (போனி கபூர் – மோனா தம்பதியரின் பிள்ளைகள்) ஆதரவைப் பெற்றிருப்பதில் நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் இந்த ஈடுசெய்யமுடியாத இழப்பை எதிர்கொள்ள முயற்சிக்கிறோம். ஓர் நிலவு போல திரை உலகிற்கு இருந்த ஶ்ரீ, எனக்கு காதலி, துணைவி, தோழி, என் பிள்ளைகளுக்கு தாய் என எல்லாமுமாய் இருந்தார். இரு மகள்களின் ஆதி முதல் அந்தம் வரை எல்லாமே என்னவள் ஶ்ரீதேவி தான். எங்கள் குடும்பம் என்ற சக்கரம் ஓட அச்சாணியாக இருந்தார்.

திரைக் கலைஞர்களின் நினைவலைகள் எப்போதும் கீழே இறங்காது. அவர்கள் எப்போதுமே வெள்ளித்திரையில் பிரகாசித்துக்கொண்டே இருப்பார்கள். ஒரு நடிகையாக அவர் இடத்தை யாராலும் நிரப்ப இயலாது. ஶ்ரீதேவியின் ரசிகர்களுக்கு ஒன்று சொல்ல நினைக்கிறேன். உங்களுக்கு ஶ்ரீதேவியிடம் பேச வேண்டுமானால், அவருடைய நினைவுகளும் திரைப்படங்களும் உங்களை ஶ்ரீதேவியிடம் அழைத்துச் செல்லும். மிகுந்த மன கணத்தோடு உன்னை வழி அனுப்புகின்றோம். எங்கள் வாழ்க்கை, எங்களின் பலம், எங்கள் உதட்டில் சிந்தும் சிரிப்பிற்கு காரணமே ஶ்ரீதேவி தான். என் முழு கவனம், அக்கறை எல்லாமே குஷியையும் ஜான்வியையும் நல்வழியில் வழி நடத்துவதில்தான் இருக்கிறது. அமைதி கொள் அன்பே! நீ இல்லாத வாழ்க்கை எப்படி இருக்குமோ ?” என்ற உருக்கமான வரிகள் அதில் இடம்பெற்றுள்ளது.

பொண்டாட்டி, புள்ளைங்க இருந்தும் ஸ்ரீதேவியை விரட்டி விரட்டி காதலித்த போனி கபூர்

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles