அனைவரையும் கலாய்த்து இணையத்தில் கலக்கிய சிவா

நடிகர் சிவா, அஜித், விஜய், விஷால், தனுஷ் ஆகியோரை கலாய்த்து சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி இருக்கிறார்.

மிர்ச்சி சிவா நடிப்பில் 2010-ஆம் ஆண்டு வெளியான படம் ‘தமிழ்ப்படம்’. சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகம் பரபரப்பாக உருவாகி வருகிறது. சி.எஸ்.அமுதனே இயக்கி வரும் இதிலும் ஹீரோவாக சிவாவே நடித்துள்ளார்.

சிவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். மேலும், சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். முதல் பாகத்தில் நடித்த திஷா பாண்டேவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கண்ணன் இசையமைத்து வரும் இதற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.சஷிகாந்த் தயாரித்திருக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் டீசரை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த டீசரில் விஷாலின் துப்பறிவாளன், ஆம்பள, விஜய்யின் துப்பாக்கி, மெர்சல், அஜித்தின் விவேகம், மங்காத்தா, தனுஷின் விஐபி, விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்களை கலாய்த்து வெளியாகி இருக்கிறது. இந்த டீசர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்காகி உள்ளது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles