அத்தி வரதர் மீண்டும் 2059-ம் ஆண்டு தான் காட்சி தருவார்

இன்று முதல் காட்சி தரும் அத்தி வரதர் ஆகஸ்டு 17-ந்தேதி வரை பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அடுத்து 2059-ம் ஆண்டு தான் மீண்டும் பக்தர்களுக்கு காட்சி தர வருவார்.

வசந்த மண்டபத்தில் இருந்து இன்று முதல் காட்சி தரும் ஆதி அத்தி வரதர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதி வரை பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன்பிறகு, பரிகார பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் நீருக்கடியில் வைக்கப்படுவார். அடுத்து 2059-ம் ஆண்டு தான் மீண்டும் பக்தர்களுக்கு காட்சி தர வருவார்.

இதற்கு முன்பு 1854-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந்தேதி, 1892-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ந்தேதி, 1937-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந்தேதி ஆகிய நாட்களில் ஆதி அத்தி வரதர் குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்துள்ளார். ஆனால், அப்போதெல்லாம் 40 ஆண்டுகள் இடைவெளி என்பது சரியாக பின்பற்றப்படவில்லை.

1937-ம் ஆண்டுக்கு பிறகு 1977-ம் ஆண்டு ஆதி அத்தி வரதர் குளத்தில் இருந்து வெளியே வந்திருக்க வேண்டும். அந்த நேரத்தில், கோவில் ராஜகோபுரம் கட்டும் பணி நடந்துள்ளது. எனவே, அந்தப் பணி முடிந்ததும் 1978-ம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு, 1979-ம் ஆண்டு ஜூலை 2-ந்தேதி தான் (அதாவது 42 ஆண்டுகள் கழித்து) ஆதி அத்தி வரதர் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார். தற்போது, சரியாக 40 ஆண்டுகளில் மீண்டும் அவர் வெளியே வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles