தமிழ் வருடத்தில் ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். அப்படி சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடிய மாதம் தான் ஆவணி மாதம். சிம்ம ராசி என்பது சூரிய பகவானுக்குரிய ராசியாக கருதப்படுகிறது. மேலும் அவருக்குரிய ராசியிலேயே அவர் பயணம் செய்யும்பொழுது ஒரு சில ராசிகளுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அதேபோல் ஒரு சில ராசிகளுக்கு நன்மைகளும் உண்டாகும். இந்த ஜோதிடம் குறித்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஆவணி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
ஆவணி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். ஆவணி 2 ஆம் தேதி கன்னி ராசிக்கு செல்கிறார். புதன் சிம்மத்தில் அமர்ந்திருக்கிறார். குரு மேஷ ராசியில் இருக்கிறார். சுக்கிரன் கடக ராசியில் நிற்கிறார். சனி கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார். ராகு மேஷ ராசியில் இருக்கிறார். கேது துலாம் ராசியில் இருக்கிறார். இப்படிப்பட்ட சஞ்சாரத்தில் ஆரம்பிக்கக்கூடியதாக திகழ்வதுதான் ஆவணி மாதம். இந்த ஆவணி மாதத்தில் இந்த கிரகங்களின் சஞ்சாரப்படி சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள். அந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த ராசிக்காரர்கள் கவனத்துடன் செயலாற்ற வேண்டும். யாரிடமும் எந்த சூழ்நிலையிலும் எந்த வாக்குறுதியையும் தராமல் இருப்பது நல்லது. மேலும் யாரிடம் இருந்தும் கடன் வாங்காமல் இருக்க வேண்டும். அதையும் மீறி கடன் வாங்கினால் அதனால் பாதிப்புகள் ஏற்படக்கூடும். மேலும் யாருக்காகவும் முன் நின்று எந்த செயலையும் செய்யாமல் இருக்க வேண்டும். குறிப்பாக ஜாமின் கையெழுத்து போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. வேலை செய்யும் பொழுது வேலையில் முழு கவனத்துடன் செய்ய வேண்டும். தொழிலில் அகலக்கால் எடுத்து வைக்கக் கூடாது. புதிதாக முன்பின் தெரியாதவர்களிடம் பேசும் பொழுது கவனத்துடன் பேச வேண்டும். தங்களுடைய ரகசியங்களை பிறரிடம் கூறக்கூடாது. அதேபோல் பலவீனங்களையும் கூறக்கூடாது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.
படிக்கும் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்தி தேவையற்ற பொழுதுபோக்கை மேற்கொள்ளாமல் இருந்தால் நன்றாக படிக்க முடியும். தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு தெய்வத்தின் பாதங்களில் சரணாகதி அடையும் போது மலைபோல் வந்த துன்பம் கூட பனிபோல் விலகி விடும். இந்த ஆவணி மாதத்தில் மேல் சொன்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் ரிஷபம், கன்னி, மகரம், மீனம்.
இந்த ராசிக்காரர்கள் தங்களுடைய வேலையில் முழு கவனத்தை செலுத்தி பிறரிடம் எந்தவித பிரச்சனைகளிலும் ஈடுபடாமல் அமைதியுடனும் பொறுமையுடனும் இருந்தால் கண்டிப்பாக முறையில் ஆவணி மாதம் ஒரு சிறப்பான மாதமாக அமையும். முடிந்த அளவிற்கு வீண் விரயத்தை தவிர்த்து பணத்தை கையாளும் திறமையை மேம்படுத்திக் கொள்வது நல்லது.
ஆகஸ்ட் 2024 இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் கவனமாக இருக்க வேண்டும். எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கும். அனைத்தும் தெய்வத்தின் கைவசம் இருக்கிறது. இருப்பினும் இந்த நான்கு ராசிகள் இந்த ஆவணி மாதத்தில் சற்று கூடுதல் கவனத்துடன் செயலாற்றி தங்களுடைய வேலை, குடும்பம் என்று இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாது