Wednesday, June 3, 2020
Home செய்திகள் உலகம் யாரோ ஒருவர் செய்த தவறுக்காக 19 வருடங்களாக தண்டனையை அனுபவித்த ஆமை! தெரியாமல் கூட இனி...

யாரோ ஒருவர் செய்த தவறுக்காக 19 வருடங்களாக தண்டனையை அனுபவித்த ஆமை! தெரியாமல் கூட இனி இப்படிப்பட்ட தவறை யாரும் செய்யாதீங்க!

 

நாம் அறியாமல் செய்யும், சின்னச் சின்னத் தவறுகள் கூட, பிற உயிரினங்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். யாரோ ஒருவர் அறியாமல் செய்த பாவச் செயலுக்கான தண்டனையை, இந்த ஆமை 19 வருடங்களாக அனுபவத்து வருகிறது. இந்த சம்பவத்தைப் பற்றிய விரிவான செய்தியை பின்வருமாறு காணலாம். மனிதர்களைப் பொறுத்தவரை தனக்கு தேவையில்லாத பொருட்களை, வேண்டாம் என்று வெளியில் தூக்கி வீசி விடுகின்றோம்.

ஆனால் நாம் வீசக்கூடிய அந்த பொருளினால் என்ன பாதிப்பு வரும் என்பதை நாம் என்றுமே சிந்தித்துப் பார்ப்பதில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பாக கடலிலிருந்து ஒரு வித்தியாசமான ஆமை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஆமையானது, கண்டுபிடிக்கப்பட்ட போது அந்த ஆமைக்கு வயது 19. பார்ப்பதற்கு அந்த ஆமை மிகவும் வித்தியாசமாக இருந்துள்ளது. காரணம், அந்த ஆமையானது ஒரு பிளாஸ்டிக் வளையத்தினுள் சிக்கி இருந்துள்ளது.

அதன் பின்பு ஆராய்ச்சியாளர்கள் அந்த பிளாஸ்டிக் வளையத்தை, அந்த ஆமையின் உடம்பிலிருந்து துண்டித்து எடுத்து விட்டனர். ஆனால் இதில் வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், அந்த ஆமை சிறுவயதில் இருந்த போதே அந்த வளையம் அதனுடைய உடம்பில் மாட்டியுள்ளது. தனது உடம்பில் அந்த வளையமானது மாட்டிக்கொண்டது தெரிந்ததும், அதிலிருந்து வெளியே வர முயற்சியும் செய்துள்ளது. ஆனால் முடியவில்லை. காலப்போக்கில் ஆமை வளர வளர அந்த வளையம் ஆமையின் உடலில் இறுக்கம் கொடுத்துள்ளது.

- Advertisement -

உயிர் வாழ்வதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும் அந்த ஆமை, என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்! 19 வருடங்களாக எவ்வளவு இடர்பாடுகளை கடந்து அது தன் வாழ்வை வாழ்ந்ததோ? யாரோ ஒருவர் கடலில் அந்த மோதிரத்தை வீசியதால் தான் இப்படிப்பட்ட சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இந்த சம்பவமானது நீண்ட நாட்களுக்கு முன்பு நடந்திருந்தாலும், இதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம், மிகப் பெரியது என்பதை எல்லோரும் உணரவேண்டும் என்பதற்காக தான் இந்த பதிவு.

tortoise-thinatamil
tortoise-thinatamil

வாயில்லா ஜீவன்களுக்கு நம்மால் எந்த ஒரு நல்லதையும் செய்ய முடியாமல் போனாலும் பரவாயில்லை. கெடுதலாவது செய்யாமல் இருப்போமே. இன்று வளர்ந்து வரும் பல தொழில்நுட்பங்கள், இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது என்று சொன்னால் நிச்சயம் அது பொய்யாகாது. எந்த ஒரு முன்னேற்றமாக இருந்தாலும், நாம் செய்யும் எந்த ஒரு செயல்பாடாக இருந்தாலும், இயற்கையையும், மற்ற உயிரினத்தையும் பாதிக்காத அளவில் இருந்தால்தான், அது ஆரோக்கியமான முன்னேற்றமாக இருக்கும்.

ஆனால், இந்த உலகமானது முன்னேறிச் செல்ல செல்ல, இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வருகிறது. இயற்கைக்கு எதிராக நாம் செய்யும் ஒவ்வொரு செயல்பாடும், திரும்பவும் நம்மை தான் பாதிக்கப் போகின்றது என்ற உண்மையை நாம் என்று தான் புரிந்து கொள்ளப் போகின்றோம். யாரோ ஒருவர், செய்த தவறில் இந்த ஆமை சிக்கியுள்ளது என்பது, இன்று நாம் எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால், நாம் தினந்தோறும் இயற்கைக்கு எதிராக செய்யும் எத்தனையோ தவறுகளில், எத்தனையோ உயிரினங்கள் அழிகின்றது என்பதை நினைத்து பார்க்கும் போது தான் வருத்தமே அதிகமாகிறது.

Here we have Tortoise 19 years. Tortoise news. Tortoise plastic. Tortoise plastic pollution. Plastic pollution in ocean animals.

- Advertisment -

ஏனைய செய்திகள்

பீஷ்மரைவிட சகுனி ஏன் சிறந்தவன் ? கிருஷ்ணரின் விளக்கம்

#சகுனி தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி, இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே...

வியப்பூட்டும் மலர் மருத்துவம் – Flower Theraphy Natural Medicine

மூலிகைகள் எப்படி நோய் தீர்க்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறதோ, அதேபோல் மலர்களும் சக்தி வாய்ந்தவையே. இந்திய மருத்துவத்தில் மலர்களை பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனாலும், இதற்கு நவீன அடையாளமும் அங்கீகாரமும் கொடுத்தவர்...

காற்று மாசை இனி கட்டுப்படுத்தலாம்… -Air pollution can no longer...

இன்று மொத்த உலகையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது காற்று மாசு. இத்தகைய சூழலில் நாம் வாழும் நம் வீடு/அலுவலகத்தில் சுத்தமான காற்றை சுவாசிக்கத் தரும் செடிகள் குறித்து தெரிந்துகொள்வோம். Air pollution can...

உன் சமயலறையில் …..!

* புளித்த மோராக இருந்தால் மோர்க்குழம்பு ஜீரணமாகாது. சிறிது பூண்டு சேர்த்தால் குழம்பு சுவையாகவும் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். * பிரெட் ஸ்லைஸ் மீதியாகி விட்டால் அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில்...

வாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி -papaya cures Mouth sore

பப்பாளி மரத்தின் இலைகள், விதைகள், காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்தப் பழத்தை ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்றும் வர்ணிக்கின்றனர். * பப்பாளிக்காயை கூட்டாகச் செய்து சாப்பிட்டு வந்தால் குண்டான உடல்...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline