கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் கிருஷ்ணரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பது தெரியுமா? அப்படி வழிபடும்போது எந்தெந்த ராசியினர் எந்த கிருஷ்ணரை வழிபட வேண்டும்? என்பது பற்றியும் 12 ராசியினருக்குமான வழிப்பட வேண்டிய கிருஷ்ணர் யார் யார்?
கிருஷ்ணருக்கு பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை வரையவும். கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும். பின்னர் கிருஷ்ணகமல் பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும். அப்போது மூன்று அல்லது மூன்றை விட அதிகமாக எண்ணிக்கையில் பூக்களை அர்ப்பணிக்க வேண்டும். அப்படி பூக்களை அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும்.
சூரியன் எதிரி நட்சத்திரத்திற்கு மாறுவதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுதாம்.! அடுத்ததாக இந்த வழிபாட்டிற்கு புதிதாக வெண்ணையும் ஒரே ஒரு மயில் இறகும் தேவைப்படும். இவை இரண்டையும் புதிதாக தான் வாங்க வேண்டுமே தவிர ஏற்கனவே இருந்த பொருட்களை உபயோகப்படுத்த கூடாது. மயில் இறகு சிறிய அளவில் இருந்தால் போதும். இந்த வழிபாட்டை புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் தொடங்க வேண்டும். தொடர்ந்து எட்டு தினங்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். மாலை 6:30 மணிக்கு மேல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்..
பிறகு அந்த மயிலிறகை கிருஷ்ணரின் பாதத்தில் படுமாறு வைத்துவிட்டு “ஓம் க்லீம் கிருஷ்ணாய நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து எட்டு நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். மயிலிறகை பூஜையின் ஆரம்பத்தில் மட்டும் கையில் வைத்து வேண்டினால் போதும் மற்ற நாட்களில் கையில் எடுக்காமல் கிருஷ்ணரின் பாதத்திலேயே இருக்கட்டும். ஒன்பதாவது நாள் எப்போதும் போல் பூஜை செய்துவிட்டு தூபதீப ஆராதனை காட்டி மந்திரத்தை உச்சரித்த பிறகு அந்த மயிலிறகை எடுத்து பீரோவில் வைத்து விட வேண்டும்..
கிருஷ்ண ஜெயந்தி எப்போது?
இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 26ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 09.13 மணி துவங்கி, ஆகஸ்ட் 27ம் தேதி காலை 07.30 வரை அஷ்டமி திதி உள்ளது. அதே சமயம், ஆகஸ்ட் 26ம் தேதி இரவு 09.41 மணிக்கே ரோகிணி நட்சத்திரம் துவங்குகிறது. ஆகஸ்ட் 27ம் தேதி இரவு 08.54 மணி வரை ரோகிணி நட்சத்திரம். இருந்தாலும் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வரும் இரவு நேரமே கிருஷ்ணர் அவதரித்த நாளாக கருதப்படுவதால் ஆகஸ்ட் 26ம் தேதி மாலையே கிருஷ்ண ஜெயந்தி வழிபாடுகளை செய்ய வேண்டும்.
எந்த ராசியினர் எந்த கிருஷ்ணாவை வணங்க வேண்டும்..
1. மேஷம் – சங்கு சக்கரம் ஏந்திய கிருஷ்ணன்
2. ரிஷபம் – பசுவுடன் உள்ள கிருஷ்ணன், குழல் ஊதும் கிருஷ்ணன்
3. மிதுனம் – ராதையுடன் உள்ள கிருஷ்ணன், பலராமன் உடன் இருக்கும் கிருஷ்ணன்
4. கடகம் – யசோதை உடன் உள்ள கிருஷ்ணன்
5. சிம்மம் – மலையை தூக்கி தன் மக்களை காக்கும் கிருஷ்ணன், கிரீடம் தரித்த கிருஷ்ணன்
6. கன்னி – தனது மனைவியர் உடன் உள்ள கிருஷ்ணன்
7. துலாம் – துலாபாரம் செய்யும் விதத்தில் உள்ள கிருஷ்ணன்
8. விருச்சிகம் – காளிங்க நர்த்தனன்
9. தனுர் – தேரோட்டி கிருஷ்ணன்
10. மகரம் – மாடு மேய்க்கும் கிருஷ்ணன், குருவாயூர் கிருஷ்ணன்
11. கும்பம் – வெண்ணை பானையுடன் உள்ள கிருஷ்ணன்
12. மீனம் – கீதா உபதேசம் செய்யும் கிருஷ்ணன், தசாவதாரம்