
நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2024 ஜூலை 28 ஆம் தேதி முதல் 2024 ஆகஸ்ட் 03 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நல்ல நிதி ஆதாயமும் கிடைக்கும். உங்களின் முழு கவனமும் உங்களின் இலக்கை நோக்கியிருக்கும். பொறுப்புகள் அனைத்தையும் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
வியாபாரிகள் கடன் தொல்லையில் இருந்து விடுபடுவார்கள். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலனைத் தரும். புதிய வாகனம், வீடு போன்றவற்றை வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த வாரம் சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் மாணவர்களுக்கு சற்று மோசமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் பிஸியாக இருக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். அன்புக்குரியவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். மிகவும் பிஸியாக இருப்பதால் ஆரோக்கியம் மோசமடையக்கூடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆரோக்கியம் மற்றும் பண விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். வேலையுடன், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். இந்த வாரத்தில் சில தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். இதனால் உங்கள் பட்ஜெட் பாதிக்கப்படும்.
கவனக்குறைவாக இருந்தால், உங்கள் கடன் சுமை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். வேலை தொடர்பான முடிவுகளை அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும். கடினமான சூழ்நிலைகளில் உங்கள் அன்புக்குரியவரிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் சாதகமாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு கிடைப்பதால் பண பிரச்சனைகள் தீரும். முதலீடுகளை செய்ய சிறந்த நேரம். திருமணமாகாதவராக இருந்தால் உங்கள் விருப்பப்படி வாழ்க்கைத் துணையைப் பெறலாம்.
நீங்கள் ஏற்கனவே திருமணமானவராக இருந்தால், உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன கிடைக்கும். லை சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும். வியாபாரிகள் லாபம் ஈட்ட குறுக்கு வழிகளை பின்பற்றுவதை தவிர்க்க வேண்டும். உடல்நிலை நன்றாக இருக்கும். அதன் தாக்கம் உங்கள் வேலையிலும் தெரியும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் சோம்பேறித்தனத்தைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் முக்கிய வேலைகள் முழுமையடையாமல் போகும். வாரத்தின் தொடக்கம் சிறப்பாக இருக்காது. தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவதில் சிக்கலை சந்திக்கலாம்.
எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள் மற்றும் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். நிதி ரீதியாக, அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். உழைத்து சம்பாதித்த பணத்தை சரியாக பயன்படுத்தினால், உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீர்ந்துவிடும். தாம்பத்திய வாழ்க்கையில் அதிக கவனம் தேவை. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் சில நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வருமானத்திலும் உயர்வு ஏறபடலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
அனைத்து வேலைகளும் திட்டமிட்டபடி முடிக்கப்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு வலுவடையும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். நிதி விஷயங்களில் கவனமாக இருக்கவும். குறிப்பாக, முதலீடு தொடர்பான முடிவுகளை சிந்தித்து எடுக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் சுமாராக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இருப்பினும், பணம் விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். இது தவிர, மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும்.
வீட்டில் அமைதியான சூழல் நிலவும். தந்தையின் உடல்நிலை சரியில்லை என்றால் அவரது உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உறவில் இனிமை நிலைத்திருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் லாபகரமாக இருக்கும். எதிர்பார்த்ததை விட இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வியாபாரியாக இருந்தால், நீங்கள் ஒரு பெரிய ஆர்டரைப் பெற வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும்.
கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் அடிப்படையில் நல்ல வெற்றியை பெற முடியும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். வீட்டில் பணம் சம்பந்தமாக வாக்குவாதங்கள் வரலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் ஆரம்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். வேலை தொடர்பான மன அழுத்தம் அதிகரிக்கலாம். வேலை செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
முக்கியமான வேலைகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். இந்த வாரத்தில் நீங்கள் நிறைய ஓட வேண்டியிருக்கும். வீட்டுப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உங்கள் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களின் திருமணம் நிச்சயிக்கப்படும். நல்ல ஆரோக்கியத்திற்கு யோகா மற்றும் தியானத்தை செய்யுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் நீங்கள் எடுக்கும் திட்டங்கள் வெற்றி பெறலாம். உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். வியாபாரிகளின் பயணம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
உங்கள் நிதி நிலை வலுவடையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சொத்து முதலியவற்றில் முதலீடு செய்வது உங்களுக்கு சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் கவனக்குறைவான அணுகுமுறை உங்கள் பிரச்சினைகளை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் மன அமைதியைப் பேண நீங்கள் தினமும் தியானம் செய்ய வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள் இந்த வாரத்தில் நல்ல செய்தியைப் பெறலாம். வியாபாரிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். கூட்டு தொழில் செய்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.
நிதி நிலை நன்றாக இருக்கும். வசதிகள் பெருகும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாணவர்கள் கல்வி தொடர்பான முயற்சிகளில் வெற்றி பெறலாம். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியில் சேரலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் பிரச்சனைகளில் இருந்து ஓடுவதற்கு பதிலாக, அவற்றை எதிர்கொள்ள முயற்சி செய்யுங்கள். பணிபுரிபவர்66களின் பணிச்சுமை கூடும். நிலுவையில் உள்ள பணிகளை விரைவில் முடிக்க முயற்சிக்க வேண்டும். அலுவலகத்தில் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள வேண்டும். பணிச்சுமை அதிகரிப்பதால் அதிக எரிச்சலடையலாம்.
வியாபாரிகளுக்கு சாதகமாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். எந்த ஒப்பந்தத்தையும் அவசரப்பட்டு ஒப்புக்கொள்ள வேண்டாம். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்க வாழ்க்கைத் துணைக்கு அதிக நேரத்தை செலவிட முயற்சிக்கவும். இந்த வாரம் காதல் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.