ரஷ்யாவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் 75 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் 76.11 சதவிகித வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். #RussianElections #VladimirPutin #RussiaPresidentialPoll
ரஷ்யாவின் தற்போதைய அதிபரான விளாடிமிர் புதினின் பதவிக்காலம் முடிந்த நிலையில் அடுத்த அதிபரை தெரிவுக்கான தேர்தல் நேற்று (18) அன்று நடைபெற்றது.
இப்பேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட எட்டு பேர் போட்டியிட்டனர். விளாடிமிர் புதின் சார்ட்ஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். விஸ்கிமிர் சிரினோவ்ஸ்கி (லிபரல் ஜனநாயக கட்சி), கெசனியா சோப்சாக், மேக்சிம் சுரேகின் (ரஷ்ய கம்யூனிஸ்ட்), போரிஸ் டிடோவ் (வளர்ச்சி கட்சி), கிரிகோரி யாவ்லின்ஸ்கி (யப்லோகோ) ஆகியோரும் களத்தில் உள்ளனர்.
இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தோற்கடித்து எளிதில் வெற்றி பெறுவார் என ரஷ்யாவில் தனியார் நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.
இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. 94.80 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் 76.56 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பவெல் குருதினின் 11.92 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். இதனால் விளாடிமிர் புதின் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவது உறுதியாக உள்ளது.
புதிதாக தற்போது வரையில் 5 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 184 வாக்குகள் பெற்றுள்ளார். இது 4 கோடியை 36 லட்சத்து 53 ஆயிரத்து 206 வாக்குகள் அதிகரித்து 80 லட்சத்து 50 ஆயிரத்து 978 வாக்குகளை பெற்றுள்ளது. #RussianElections #VladimirPutin #RussiaPresidentialPoll # tamilnews