visakam natchathiram 2020 in tamil,visakam natchathiram 2019 in tamil,visakam natchathiram which rasi,thulam rasi visagam natchathiram 2020 in tamil,thula rasi vishaka natchathiram 2020 in tamil,vishakha nakshatra marriage life in tamil,visakam natchathiram names,thulam rasi visagam natchathiram 2019
விசாகம்
தமிழ் வருட விசாகம் நட்சத்திர பலன்கள் 14.04.2019 முதல் 13.04.2020 வரை visakam natchathiram rasi palan in tamil
கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் இருபத்தி ஒன்றாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.
பலன்:
லாபத்தை அதிகரிக்க பாடுபடும் விசாகம் நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரவு சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். மேலதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். பெண்களுக்கு கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு இருந்த பிரச்னை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்னை தீரும். மாணவர்களுக்கு: மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.
பரிகாரம்:
அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்னை தீரும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்:
சந்திரன், செவ்வாய், குரு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், செவ்வாய், வியாழன்.
அதிர்ஷ்ட மாதங்கள்:
சித்திரை, ஆடி, கார்த்திகை, பங்குனி.