Sunday, July 12, 2020
Home ஆன்மீகம் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, இந்தச் செடியை ஒரு முறை பார்த்துவிட்டு செல்லுங்கள்! எந்தவிதமான சகுன...

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, இந்தச் செடியை ஒரு முறை பார்த்துவிட்டு செல்லுங்கள்! எந்தவிதமான சகுன தோஷமும் உங்களை தாக்காது.

கணவர், வெளியே செல்லும் போது மனைவி, உடன் சென்று வழி அனுப்பி வைப்பதுதான் மிகவும் சரியான முறை. அப்படி சந்தோஷமாக, நல்ல முறையில் வழி அனுப்பி வைக்கும் பட்சத்தில், கணவர் சென்ற காரியம் நிச்சயம் வெற்றிதான். வீட்டில் இருக்கும் மனைவியே மகாலட்சுமியின் அம்சம். தினந்தோறும் அலுவலகத்திற்கு செல்லும் கணவராக இருந்தாலும் கூட, அவரின் அலுவலக பணிகள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல், சுமூகமாக செல்வதற்கு, மனைவி வழி அனுப்பி வைப்பது சிறப்பு.

மனைவியின் முகத்தை பார்த்து விட்டு சென்றால், கட்டாயம் அதிர்ஷ்டம் தான். ஒரு குடும்பமானது மகிழ்ச்சியான சூழ்நிலையில் இருக்கும் பட்சத்தில், அக்கம்பக்கம் இருப்பவர்களின் கண்திருஷ்டி, கட்டாயம் படாமல் இருக்காது. வசதி வாய்ப்பு குறைவாக இருந்தாலும், சில பேரது வீட்டில், நிம்மதிக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட வீடுகளைப் பார்க்கும்போது, சாதாரணமாகவே எல்லோருக்கும் ஒரு மன உறுத்தல் ஏற்படும்.

‘ஐயோ! இவர்கள் வீட்டில் மட்டும் எவ்வளவு சந்தோஷம் நிலைத்திருக்கின்றது. வருமானம் குறைவு தான், எப்படி சந்தோஷமாக வாழ்கிறார்கள்?’ என்று பெருமூச்சு விட்டால் அவ்வளவுதான். இன்னும் சில பேர், சந்தோஷமாக இருக்கும் குடும்பம் கஷ்டப்பட வேண்டும் என்பதற்காக, சில பிரச்சினைகளை தூண்டிவிடும் அளவிற்குக்கூட போவார்கள். உங்கள் கணவர் வீட்டை விட்டு கிளம்பும் போது அல்லது நீங்கள் குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்லும் போதோ, அபசகுனமாக குப்பைகளை கொண்டு வந்து ரோட்டில் வீசுவது, அசுத்தமான தண்ணீரை ஊற்றுவது, அல்லது இவர்கள் செல்லும் காரியம் வெற்றியாக முடியக் கூடாது என்று சாபம் விடுவது, போன்ற பிரச்சினைகளில் ஈடுபடும் பல பேர் உள்ளார்கள்.

இதில் நம் உறவுகளும் அடங்கும். அக்கம்பக்கத்தினரும் அடங்குவார்கள். பொத்தாம் பொதுவாக எல்லாரையும் கெட்ட எண்ணம் பிடித்தவர்கள் என்று குறை கூறி விட முடியாது. அடுத்தவர்களைப் பார்த்து பொறாமை கொள்ளாத நல்ல எண்ணம் கொண்டவர்களும் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். சிலபேர் வெளிப்படையாக தங்களது எதிர்ப்புகளை காட்டுவார்கள். சிலபேர் நமக்கு பின்னால் நமக்கே தெரியாமல் குழி தோண்டி வைத்துவிடுவார்கள்.

- Advertisement -

என்ன செய்வது? இப்படிப்பட்டவர்களின் கெட்ட எண்ணத்திற்கு பலியான குடும்பம் எத்தனையோ உள்ளது. அந்த வரிசையில் நாமும் சிக்கிக் கொள்ளக் கூடாது அல்லவா? எப்போதும் நாம் பாதுகாப்பு வளையத்தில் இருப்பதுதான் நல்லது. துளசி செடியை பற்றி நமக்கு தெரியாத மகத்துவமே கிடையாது. ஆனால், அந்த துளசி செடிக்கு இப்படி ஒரு அபூர்வ சக்தி இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? நாம் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன்பாக, நம்முடைய மனதை ஒரு நிலைப்படுத்தி, துளசிச் செடியை 15 வினாடிகள் பார்க்க வேண்டும்.

tulsi-sedi-thinatamil
tulsi-sedi-thinatamil

அதாவது துளசிச் செடியை அந்த பசுமை நிறத்தை, அழகான தோற்றத்தை உங்கள் மனதிற்குள் உள்வாங்கிக் கொண்டு, கண்களை மூடி ஒரு நிமிடம் துளசி தேவியை வேண்டி கொண்டு, வீட்டில் இருந்து செல்லும் பட்சத்தில், உங்களுக்கு ஏற்படும் எப்படிப்பட்ட சகுன தோஷமாக இருந்தாலும் சரி, யாருடைய பெரும் மூச்சாக இருந்தாலும் சரி, கெட்ட எண்ணமாக இருந்தாலும் சரி, அந்த தோஷம் உங்களையும் உங்களது வீட்டையும் தாகவே தாக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. இது ஒரு சுலபமான முறை தான்.

ஆனால், உங்களுடைய வீட்டில் துளசிச் செடி, ஒரு சிறிய தொட்டியிலாவது வைத்து, நீங்கள் பராமரிக்க வேண்டியது அவசியம். உங்களால் முடியும் பட்சத்தில் இதை பின்பற்றிப் பாருங்கள், உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் வெகுவாக குறைவதை உங்களால் உணர முடியும். உங்களுடைய வீட்டில் இருக்கும் ஆணுடைய வெற்றியாக இருந்தாலும், பெண்ணுடைய வெற்றியாக இருந்தாலும் எந்த விதத்திலும் தடைபடாது.

- Advertisment -

ஏனைய செய்திகள்

கல்லீரல் நோய் வராமல் இருக்க இந்த உணவை சாப்பிட்டால் போதும்

கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைப்பது என்பது சவால் நிறைந்தது. ஏனெனில் உடலில் கல்லீரல் மிகவும் பெரிய உறுப்புமாகும். இது உடலில் நூற்றுக்கணக்கான வேலைகளை செய்கிறது. அதில் ஒன்று தான் கொழுப்பைக்...

அரண்மனைக்கிளி சீரியல் ஜானுவா இவர்..? ஆள் அடையாளமே தெரியவில்லையே..! இப்போ எப்படி...

அரண்மனை கிளி விஜய் டிவியில் செப்டம்பர் 24ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, நவம்பர் 11, 2019 முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி,...

தினசரி காலை உணவாக வெறும் மூன்று முட்டை போதும்.. சாப்பிட்டு பாருங்க…உங்கள்...

உணவே மருந்து என்பது நம் மூதாதையர்கள் நமக்கு காட்டிக் கொடுத்த உன்னத வைத்தியங்களில் ஒன்று. அதனால் தான் தமிழர்கள் ஆரோக்கிய உணவுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் இன்று காலமாற்றம் என்னும் பெயரில் பீட்சா,...

வெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம்! இரவு படுக்கும் முன் இதை...

சீரகத்தில் தயாரிக்கும் பானத்தினை தயாரித்து இரவில் ஒரு முறை 7 நாள் குடித்தாலே போதும் உங்கள் உடல் எடை மிக விரைவாக குறையும். உடலை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சீரகம் ஒரு அற்புதமான...

உடல் சூட்டை தணிக்கும் சில எளிய வழிகள்…..

கோடைக்காலத்தில் உடம்பு எப்போழுதுமே சூடாகவே காணப்படும். இதனால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு, ஆற்றலை இழந்து காணப்படும். இதன் காரணமாக தலைவலி முதல் முகப்பரு, போன்றவை வரை பலவற்றை சந்திக்கக்கூடும். இதில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்படுள்ள...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline