தமிழ் திரையுலகில் மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகிலேயே கவனிக்கத்தக்க நாயகியாக வலம் வருபவர் வரலக்ஷ்மி சரத்குமார். 80கள் மற்றும் 90களில் பிரபல ஹீரோவாக கொடிக்கட்டி பறந்த சரத்குமார் மற்றும் சாயாவின் மகளான இவர், 2012ஆம் ஆண்டில் திரையுலகிற்குள் நுழைந்தார்.
வரலக்ஷ்மி சரத்குமார்:
வரலக்ஷ்மி , முதன் முதலாக நாயகியாக நடித்த படம் போடா போடி. விக்னேஷ் சிவன் நடித்திருந்த இந்த படத்தில் அவர் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே தனது துருதுரு நடிப்பால் பலரை கவர்ந்த இவர், வார்த்தைகளை வேகமாக பேசுபவர். பல சமயங்களில் இவர் பேசுவது பலருக்கு புரியாது என கூறப்படுவதுண்டு. ஜாலியான சுபாவம் கொண்ட இவர், தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மாெழி படங்களிலும் நடித்திருக்கிறார். பாலா இயக்கிய தாரை தப்பட்டை படம் இவருக்கு வேறு முகத்தை கொடுத்தது.
வரலட்சுமி, நாயகியாக மட்டுமன்றி, முக்கிய வேடங்களிலும் வில்லியாக நடித்த படங்களும் கூட நல்ல வெற்றியை பெற்றிருக்கின்றன. குறிப்பாக விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2, மாரி 2, சர்கார், வீர சிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களில் தனது வேறு பிம்பத்தை காட்டினார். இவர் இப்படிப்பட்ட கதாப்பாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருவதால், பெரிதாக அவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
திருமண நிச்சயதார்த்தம்..
வரலட்சுமி சரத்குமாருக்கு, இந்த ஆண்டின் மார்ச் மாதம் 2ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. வெகு சில உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர். வரலட்சுமி , நிக்கோலாய் சாச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். மும்பையை சேர்ந்த நிக்கோலாய் சாச்தேவ், ஆர்ட் கேலரி ஒன்றை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். அது மட்டுமன்றி, சில நடிகைகளுக்கு அவர் தனிப்பட்ட புகைப்பட கலைஞராகவும் இருப்பதாக கூறப்படுகிறது.
நிக்கோலாயும் வரலட்சுமி பல ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், இப்போதுதான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நிக்கோலாய்க்கு, 2010ஆம் ஆண்டு கவிதா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிய, பல ஆண்டுகளாக அவர்கள் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில்தான் வரலட்சுமியுடன் காதல் வசப்பட்டிருக்கிறார் நிக்கோலாய்.
சொத்து மதிப்பு!
தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் குடும்பம், சரத்குமார்-ராதிகாவின் குடும்பம். படங்களில் நடிப்பது மட்டுமன்றி இவர்கள் டெலிவிஷன் தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்து நடத்தி வருகின்றனர். இதன் மூலமும் இவர்களுக்கு வருமானம் கிட்டுகிறது. வரலட்சுமி நடிப்பதை தாண்டி சுய தொழில் ஒன்றையும் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிக்காேலாயின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கிறது.
நிக்கோலாய்க்கு, வரலட்சுமியை விட சொத்து அதிகமாக இருக்கிறதாம். இவர் ஒரு ஆளுக்கு மட்டும் சுமார் ரூ.85 கோடி அளவில் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.
திருமணம் எப்போது?
வரலட்சுமி-நிக்கோலாய்க்கு வரும் ஜூலை 2ஆம் தேதி தாய்லாந்தில் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமண தேதி நெருங்கி வருவதையொட்டி, சரத்குமாரின் குடும்பத்தினர் தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் ஒருவர் விடாமல் அனைவருக்கும் பத்திரிக்கை வைத்து வருகின்றனர்.