குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் உத்திரட்டாதி 04.10.2018 முதல் 04.11.2019 வரை

உத்திரட்டாதி
மற்றவர் மத்தியில் உயர்ந்து நிற்கத் துடிக்கும் உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே! இந்த குருபெயர்ச்சி உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் குருபகவானை நீங்கள் தொடர்ந்து வழிபட வாழ்வில் முன்னேற்றத்தைக் காண முடியும். குடும்பத்தில் தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் சரியாகும். உங்கள் மனதில் இருந்து வந்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு.

தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவு செய்வீர்கள். உங்களுக்குப் போட்டியாக இருந்தவர்கள் அனைவரும் விலகி விடுவார்கள். புதிய கட்டிடங்கள் கட்டுதல், பெரிய கடைகளை வாடகைக்கு எடுத்தல் போன்ற செலவுகள் உண்டாகும். உத்யோகஸ்தர்களுக்கு உடல் நிலையில் இருந்து வந்த பின்னடைவு சரியாகும். சக பணியாளர்களால் ஏற்பட்ட சில அவமதிப்புகள் சரியாகும். பெண்களில் தீராத நோயினால் அவதிப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.

மாணவர்கள் உங்கள் படிப்பிற்காக விலை உயர்ந்த பொருள் ஒன்றை வாங்குவீர்கள். மனதில் இருந்த சந்தேகங்கள் தீரும். அரசியல்துறையினருக்கு உங்களை விமர்சனம் செய்து வந்த எதிரிகள் காணாமல் போவார்கள். மேலிடத்திலும் உங்களைப் பற்றி அவதூறு பேசி வந்தவர்களும் விலகிச் சென்று விடுவார்கள். கலைத்துறையினருக்கு உங்களின் திறமையை புரிந்து கொள்ளாமல் உதாசீனப்படுத்தியவர்கள், உங்களைப் புரிந்து கொண்டு வாய்ப்பு தருவார்கள். அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்.

பரிகாரம்:

துளசிமாலை சாத்தி பெருமாளுக்கு தயிர்சாதம் நைவேத்யம் செய்யுங்கள்.

 

ஏனைய நட்சத்திரங்களுக்கான குரு பெயர்ச்சி பலன்களை இங்கே சென்று பார்வையிடுங்கள்

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here