Friday, March 29, 2024

Top 5 This Week

Related Posts

துணிகளில் கறை நீங்க, கேக் சேமிக்க, சரும பராமரிப்புக்கு.. சர்க்கரையை இப்படியும் பயன்படுத்தலாமா?

காயத்தின் மீது தடவுவதன் மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த சர்க்கரையையும் பயன்படுத்தலாம். இது சில ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது.

சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சர்க்கரை உட்கொள்ளும் அளவைக் குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம் என சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

- Advertisement -

அதே நேரம் சர்க்கரை மூலம் நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன, இது உங்களுக்கு நிறைய நேரத்தையும், முயற்சியையும் மிச்சப்படுத்தும். இந்த அன்றாட நடவடிக்கைகள் மிகவும் எளிமையானவை. அவை என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள படிக்கவும்.

- Advertisement -

Contact Now!

கொதிக்கும் காபியை குடித்து வீட்டீர்களா?

சர்க்கரையின் சில படிகங்கள் நாக்கு எரியும் வலியைப் போக்க உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சூடான காபியை குடித்து விட்டீர்கள், வலி தாங்க முடியவில்லை. இப்போது என்ன செய்வீர்கள்? உங்கள் வாயில் சிறிது சர்க்கரையை வைத்து, சிறிது நேரத்தில் வலி குறைவதைப் பாருங்கள்.

கறை நீக்க

வெளிர் நிற ஆடையை அணிந்து புல் மீது அமர்ந்தால் என்ன ஆகும்? கழுவுவதற்கு கடினமான பச்சை நிற கறை உங்கள் உடையில் படிந்துவிடும். சரி, இப்போது நீங்கள் இந்த கறைகளை ஒரு நொடியில் அகற்றலாம். வெதுவெதுப்பான நீரில் சிறிது சர்க்கரை சேர்த்து பேஸ்ட் செய்து, பின்னர் அதை கறையின் மீது தடவவும். குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் வைக்கவும், அதன் பிறகு நீங்கள் சாதாரணமாக கழுவலாம். கறை மறைந்துவிடும்.

- Advertisement -

ஃபேஸ் ஸ்க்ரப்

நீங்கள் தோல் பராமரிப்புக்கும் சர்க்கரை பயன்படுத்த முடியும். எப்படி என்று யோசிக்கிறீர்களா? சிறிதளவு சர்க்கரையுடன், ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து, பின்னர் அதை ஸ்க்ரப் போல முகத்தில் தடவவும். இது துளைகளை அவிழ்த்து உங்கள் சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும்.

லிப்ஸ்டிக் நீட்டிக்க

மேக்கப் ஆர்வலர்கள், சர்க்கரையானது’ லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கச் செய்யும் என்று உறுதியளிக்கிறார்கள். லிப்ஸ்டிக் தடவிய பின், சிறிது சர்க்கரையை உதடுகளில் தடவி, சிறிது நேரம் கழித்து, பின்னர் மெதுவாக உங்கள் விரல்களால் எடுக்கவும். இந்த சிறிய தந்திரம் எப்போதும் வேலை செய்கிறது!

உதடு மென்மையாக

நிச்சயமாக, உங்கள் உதடுகள் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்க வேண்டுமெனில், சர்க்கரையைப் பயன்படுத்தி இயற்கையான ஸ்க்ரப் செய்யலாம். சிறிது தேங்காய் மற்றும் புதினா எண்ணெயை எடுத்து, அதில் சர்க்கரை சேர்த்து பேஸ்ட் செய்து, உதடுகளில் தடவினால், மிருதுவாக இருக்கும்.

கேக் சேமிக்க

தங்கள் கேக் மற்றும் குக்கீகளை குறிப்பிட்ட காலத்திற்கு சுவைக்க விரும்புபவர்கள், ஃபிரிட்ஜில் சேமிக்கும் போது சில க்யூப்ஸ் சர்க்கரையைச் சேர்க்கவும், இதனால் அவற்றின் ஆயுள் நீட்டிக்கும், அவை முன்பு போல சுவையாகவும் இருக்கும்.

கிருமி நாசினி

இறுதியாக, காயத்தின் மீது தடவுவதன் மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த சர்க்கரையையும் பயன்படுத்தலாம். இது சில ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது, மேலும் இது ஒரு லேசான கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Popular Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link