Saturday, July 20, 2024

இன்றைய ராசிபலன் – 08 ஜூன் 2024

- Advertisement -
இன்றைய ராசிபலன் – 08 ஜூன் 2024
இன்றைய ராசிபலன் – 08 ஜூன் 2024
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். வேலை தேடி கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கும். மனசு சந்தோஷமடையும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். தெரிந்தவர்கள் நண்பர்கள் உங்களுடைய பிரச்சனைக்கு உதவி செய்வார்கள். இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தோல்விகள் வந்து போகும். உடனே வாழ்க்கையில் துவண்டு போகக்கூடாது. பிரச்சனைகளை எதிர் கொண்டு போராடக்கூடிய துணிவை வர வைத்துக் கொள்ளுங்கள். கடவுள் உங்கள் பக்கம் இருக்கின்றார். நிச்சயம் நல்லது நடக்கும். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்பாதீங்க. விடா முயற்சியை மேற்கொள்ளுங்கள்.

- Advertisement -
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்ய முடியாது. இதனால் வாழ்க்கையில் சின்ன பின்னடைவு வரலாம். இருந்தாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது. இதையெல்லாம் அனுபவ பாடங்களாக எடுத்துக் கொள்ளுங்கள். பெரியவர்களின் ஆலோசனையை கேளுங்கள். பொறுமையாக சிந்தித்து செயல்படுங்கள்.

- Advertisement -
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உறவினர்களின் வருகை இருக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை தரும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயரை வாங்குவீர்கள். தேவையற்ற சிக்கல்களில் இருந்து தானாக வெளிவந்து விடுவீர்கள். உங்களுடைய உதவி செய்யும் மனப்பான்மை உங்களுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும்.

- Advertisement -
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்படும். மேலதிகாரிகளிடம் திட்டு வாங்குவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் கவலைப்படாதீங்க. பிரச்சனைகளை சரி செய்ய கடவுள் உங்களுக்கு துணையாக நிற்பார். தொழிலில் முதலீடு செய்யும் போதும் கவனமாக இருக்கவும். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வீட்டில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் மனைவி அதை புரிந்து கொண்டு அனுசரித்து செல்வார்கள். நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று நீங்களே நினைத்துக் கொள்வீர்கள். அந்த அளவுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன் கோபம் வரும். எல்லாரிடத்திலும் எடுத்தெறிந்து பேசுவதால் பிரச்சனைகள் உண்டாகும். சண்டைகள் வரும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள இஷ்ட தெய்வத்தை நினைத்து தியானம் செய்யுங்கள். உறவுகளோடு ஜாக்கிரதையாக பேசுங்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் தேடி வந்து கதவை தட்டும். வாரா கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை சீராகும். சேமிப்பை உயர்த்துவீர்கள். வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். உடலுக்கு சூடு தரும் பொருட்களை சாப்பிட வேண்டாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சோதனையான நாளாக இருக்கும். எந்த வேலையை தொட்டாலும் பிரச்சனை. என்னடா செய்வது என்று, எதுவுமே செய்யாமல் இருந்தால் அதுவும் பிரச்சனையாக வந்து நிற்கும். வீட்டில் கணவன் மனைவி சண்டை இருக்கும். நிதி நிலைமை மோசமாக இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். எந்தப் பக்கம் போனாலும் பிரச்சனை. நிம்மதியாக தூங்கலாம் என்றால் அதற்கும் சோதனையை ஆண்டவன் கொடுத்துவிடுவான். இன்று குலதெய்வத்தின் பாதத்தை பற்றிக் கொள்ளுங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் அதிக ஆர்வம் கட்டுவீர்கள். புதுசாக நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும் சேமிப்பு உயரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். பெண் பிள்ளைகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். முன்பின் தெரியாத நபரிடம் குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட தூர பயணம் நன்மையை தாரும். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். கொஞ்சம் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். தொழிலில் முதலீடு செய்யும் போது கவனம் செலுத்தவும்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

2024 ஜூன் 29 வக்ர சனியின் மாற்றத்தில் நன்மைகளைப் பெற உதவும் சனி பரிகாரங்கள்! வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்!!

நவகிரகங்களில் சனீஸ்வரரின் தாக்கம் வாழ்க்கையின் எல்லா காலகட்டங்களிலும் இருந்துக் கொண்டே இருக்கிறது,...

ஆடி மாத அதிர்ஷ்ட ராசிகள்! கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது யாருக்கு எப்படி இருக்கும்?

Suriya Peyarchi Palangal: மாதப் பிறப்பு என்பது பலருக்கும் உற்சாகமான நாளாக...

சூரிய பெயர்ச்சி 2024: பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார்?

மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்லும் சூரிய பகவானால் சில ராசிகளுக்கு அதிஷ்டம்...

Tamil Trending News

ஆடிக்கூழ் – அரிசிமா கூழ் செய்வது எப்படி? இலகுவான முறை

aadi kool seivathu eppadi ஆடிக்கூழ் - அரிசிமா கூழ் செய்வது...

2024 ஜூன் 29 வக்ர சனியின் மாற்றத்தில் நன்மைகளைப் பெற உதவும் சனி பரிகாரங்கள்! வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்!!

நவகிரகங்களில் சனீஸ்வரரின் தாக்கம் வாழ்க்கையின் எல்லா காலகட்டங்களிலும் இருந்துக் கொண்டே இருக்கிறது,...

சூரிய பெயர்ச்சி 2024: பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார்?

மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்லும் சூரிய பகவானால் சில ராசிகளுக்கு அதிஷ்டம்...

இம்முறை செவ்வாயின் ராசி மாற்றம்! பணத்தில் குளிக்கும் ராசிகள் யார் தெரியுமா?

செவ்வாய் பகவான் ரிஷப ராசி பயணத்தினால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசியினர்களை இங்கு...

வேட்டையை தொடங்கிய குருவால் கொட்டும் அதிர்ஷ்டம்! இவங்களை கையில் பிடிக்கவே முடியாதாம்

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் பண அதிர்ஷ்டத்தில் மூழ்கும் ராசியினரை குறித்து...

Related Articles

error: Content is protected !!