today gold rate in tamil 4 oct 2024 நம் வீட்டில் தங்கம் ஆண்டில் ஒரு முறையோ அல்லது 2 முறையோ தான் வாங்குவோம், ஆனால் தங்கம் விலை ஒவ்வொரு முறையும் உயரும் போது மனம் பதைபதைக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் தங்கம் நாம் பிறந்ததில் இருந்து இறக்கும் வரையில் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கும் காரணத்தால் விலை உயரும்போதெல்லாம் கூடுதலாகச் செலவு செய்து வாங்க வேண்டும் என்ற காரணத்தால் மனம் பதைபதைக்கிறது.
தங்கம் விலை
இதோடு முக்கியமாகத் தங்கம் சாமானிய மக்களின் முக்கியமான முதலீடாக இருப்பதாலும், மக்களின் வருமானம் உயரும் வேகத்தைக் காட்டிலும் தங்கம் விலை உயர்வதால் இந்த பதைபதைப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோல் எப்போதெல்லாம் உலக நாடுகள் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் நிலையற்ற தன்மை வருகிறதோ அப்போதெல்லாம் தங்கம் விலை உயரும்.
சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை?! இதன் படி தற்போது மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்ரேல் – ஈரான் மத்தியில் வெடித்துள்ள பிரச்சனை கச்சா எண்ணெய் விலையும், தங்கம் விலையும் உயர முக்கியமான காரணமாக உள்ளது. இன்று சர்வதேச சந்தையிலும் சரி, உள்நாட்டுச் சந்தையிலும் சரி தங்கம் விலை அதிகரித்துள்ளது.
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சர்வதேச ஸ்பாட் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 2670 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இது காமெக்ஸ் சந்தையில் 2681 டாலராக உயர்ந்துள்ளது, இந்தியாவின் MCX சந்தையில் 10 கிராம் விலை 0.36 சதவீதம் அதிகரித்து 76,516 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதன் வாயிலாக இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் உயர்ந்து 71,200 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் உயர்ந்து 77,670 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 80 ரூபாய் உயர்ந்து 56,960 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 2000 ரூபாய் வரையில் உயர்ந்து 1,03000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 200 ரூபாய் உயர்ந்து 27,100 ரூபாயாக உள்ளது.