இந்தியாவில் தங்கம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் சர்வதேசச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை தினசரி நிர்ணயம் செய்யப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 800 ஆகவும், ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்து 400 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜூன் 8) 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 650 ஆகவும், சவரனுக்கு ரூ.53 ஆயிரத்து 200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.9 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.96 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ. 96,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.