Wednesday, February 21, 2024

Top 5 This Week

Related Posts

3வது நாளாக அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை(10.02.2024)… இன்று சவரன் எவ்வளவு?

ஆபரணத் தங்கத்தின் விலை சமீப நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது சில தினங்களாக குறைந்துள்ளது பாமர மக்களிடையே பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கம் விலை

ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது தொடர்ந்து சில தினங்களாக குறைந்துவரும் நிலையில், இன்று சவரனுக்கு 8 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.5,840ஆகவும், சவரன், ரூ.46,720 ஆகவும் இருந்து வந்தது.

- Advertisement -

இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, 5,839 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 8 குறைந்து, ரூபாய் 46 ஆயிரத்து 712 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த வாரங்களில் 45 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது சில நாட்களாக கடகடவென சரிந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

- Advertisement -

ஆனால் வெள்ளியின் விலை இன்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.76.50 ஆகவும், கிலோவிற்கு ரூ.76,500 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

தற்போது தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்தாலும் 8 மாதங்களுக்கு முன்பு 43 ஆயிரத்தில் தங்கமும், வெள்ளி 75 ஆயிரமும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Popular Articles