ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.6,330 ஆகவும் சவரன், ரூ.50,640 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து, 6,350 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 160 அதிகரித்து, 50 ஆயிரத்து 800 ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த மாதங்களில் 55 ஆயிரத்தை தாண்டி சென்ற தங்கத்தின் விலை தற்போது 50 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வருகின்றது.
மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.