Wednesday, February 21, 2024

Top 5 This Week

Related Posts

SUV வாகனங்களுக்கு மூன்று மடங்கு தரிப்பிடக் கட்டணம்! – வாக்களித்த மக்கள்!!

SUV வாகனங்களுக்கு மூன்று மடங்கு தரிப்பிடக் கட்டணம்! - வாக்களித்த மக்கள்!!
SUV வாகனங்களுக்கு மூன்று மடங்கு தரிப்பிடக் கட்டணம்! – வாக்களித்த மக்கள்!!

SUV வாகனங்களுக்கு தரிப்பிடக்கட்டணம் அதிகரிப்பதா வேண்டாமா எனும் வாக்கெடுப்பு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்தமை அறிந்ததே. அந்த வாக்கெடுப்பில் 55% சதவீதமானவர்கள் இந்த கட்டண அதிகரிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.வாக்கெடுப்பை அடுத்து, SUV உரிமையாளர்கள் விரைவில் ஒருமணிநேரத்துக்கு €18 யூரோக்கள் கட்டணமாக செலுத்த வேண்டும். பரிசுக்கு மட்டும் இந்த தொகை அறவிடப்படும். ஏனைய மாவட்டங்களுக்கு €12 யூரோக்கள் கட்டணம் அறவிடப்படும்.

1.8 தொன் எடைகொண்ட இந்த வாகனங்கள் இடத்தையும் அடைத்துக்கொண்டு நிற்பதுடன், ஏனைய சிறிய மகிழுந்துகளுடன் ஒபிடுகையில் அதிகளவு மாசடைவையும் வெளியிடுகின்றன என தெரிவிக்கப்பட்டே இந்த கட்டண அதிகரிப்பு கோரப்பட்டிருந்தது.நேற்றைய வாக்கெடுப்பில் 78,0000 பேர் பங்கேற்றிருந்தனர். அவர்களில் 54.55% சதவீதமானோர் கட்டண உயர்வுக்கு ஆதரவு வாக்குகள் அளித்திருந்தனர்.

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Popular Articles