
எண் கணிதம் என்பது பிறந்த தேதியின் அடிப்படையில் ஒருவரின் குணாதிசயங்கள் மற்றும் வாழ்க்கை போக்குகளை கணிக்கமுடியும் என்று சொல்லப்படுகிறது.
எண் கணிதம் என்பது ஒரு பழங்கால நம்பிக்கையாகும். ஒருவர் பிறந்த தேதியை வைத்து அவர்களது ஆளுமை, குணத்தை கண்டுபிடிக்க முடியுமாம். ஒவ்வொருவர் பிறந்த தினத்தின் கூட்டுத்தொகையைக் கொண்டு அதற்கான எண்கள் கண்டறியப்படுகிறது. உதாரணமாக, ஒருவரின் பிறந்த நாள் 25 என்று வைத்துக் கொள்வோம். அவரின் பிறந்தநாளின் கூட்டுத்தொகை 7 ஆகும்.
அப்படி உங்களுக்கு வரும் கூட்டு தொகையை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று கணிக்கலாம். அந்த வகையில் நியூமெராலஜி படி சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே லட்சுமி கடாட்சம் இருக்குமாம். அதனால் அவர்கள் கோடீஸ்வரர்களாகும் யோகம் இருக்குமாம். அப்படி எந்தெந்த தேதிகள் உள்ளது என பார்க்கலாம்.
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சுதந்திரமானவர்களாக திகழ்வார்கள். வாழ்க்கையில் யாரையும் சார்ந்து இருக்க மாட்டார்கள். ஒரு பிரச்சனைக்கான தீர்வை நன்றாக சிந்தித்து முடிவெடுக்க முடியும். தலைமைத்துவத்துடன் கடினமாக உழைப்பதால் நன்றாக சம்பாதித்து சொத்துக்களை சேமிப்பார்கள். இவர்களின் பிறப்பிலேயே லட்சுமியின் அருள் இருப்பதால் பொன், பொருள் சேரும்.
2,11,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மேம்பட்ட எண்ணங்கள் கொண்டவர்களாக திகழ்வார்கள். இவர்கள் எப்போதும் அசாதாரண திறன்களை கொண்டுள்ளனர். இவர்களுக்கு லட்சுமியின் அருள் இருப்பதால் எப்போதும் நிதி பிரச்சனைகள் வராது. நிதி நிலை உயர பல வழிகளில் முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் செல்வம், சக்தி, பொருள் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களாக திகழ்வார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தந்திரமாக சிந்தித்து பிரச்சனைகளை தீர்க்க முடியும். இவர்கள் எப்போதும் பண விஷயங்களில் கவனமாக இருப்பதால் நிதி பிரச்சனைகளில் இருந்து சீக்கிரம் வெளி வந்துவிடுவார்கள்.
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஆன்மீக ஞானம், இரக்கம், கருணை போன்ற குணங்களுடன் தொடர்புடையவர்களாக இருப்பார்கள். இந்த தேதியில் பிறந்தவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு உதவவும், உலகத்தை சிறந்த இடமாக மாற்றவும் முயற்சி செய்கிறார்கள். நீங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்போதும் வெற்றி பெறுபவர்களாக திகழ்வீர்கள். அதனால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நிதி பிரச்சனையை எளிதில் கையாள முடியும்.