தோஷங்கள் அண்டாமல் இருக்க பரிகாரங்கள் செய்வது அவசியமாகும். அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டதால் வெயில் கால நோய்கள் எளிதில் தொற்றிக் கொள்ளும்.
இந்நிலையில் ஆன்மீக ரீதியில் தோஷங்களிலிருந்து பாதுகாக்க நாம் வீட்டில் செய்ய வேண்டிய பரிகார முறையை பற்றி தெரிந்து கொள்வோம்.
உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு குடத்தில் தண்ணீரை வைத்து, அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து வைத்துவிடுங்கள்.
நிறைகுடமாக அக்னி நட்சத்திரம் தொடங்கும் நாளில் இதை செய்ய வேண்டும், மறுநாள் காலை அந்த தண்ணீரை எடுத்துக்கொண்டு போய், உங்கள் வீட்டு வாசலில் தெளித்து கோலமிடுங்கள்.
அதன் பின்பு மறுபடியும் ஒரு நிறை குடம் தண்ணீரை ஊற்றி, மஞ்சள் தூளை கலந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். ஒரு நாள் முழுவதும் அந்த தண்ணீர் உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இருக்கட்டும்.
மறுநாள் காலை மீண்டும் வாசல் தெளிக்க அந்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்களால் இதை செய்ய முடியாவிட்டால் ஒரு சின்ன பாத்திரத்திலாவது மஞ்சள் தண்ணீரை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விட்டு, அதன் பின்பு, அந்த தண்ணீரை நீங்கள் வாசல் தெளிக்கும் தண்ணீரில் கலந்து தெளித்து விடுங்கள்.
உங்களையும் உங்கள் வீட்டையும் அக்னி நட்சத்திர தோஷம் பாதிக்காமல் இருக்க, இது மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.