Wednesday, January 20, 2021
Home செய்திகள் இந்தியா ஊழியர்களின் துணையோடு அரசு வங்கிகளில் ரூ.2450 கோடி மோசடி: ரிசர்வ் வங்கி தகவல்

ஊழியர்களின் துணையோடு அரசு வங்கிகளில் ரூ.2450 கோடி மோசடி: ரிசர்வ் வங்கி தகவல்

The Reserve Bank of India

நாடு முழுவதும் அரசு வங்கிகளில் ரூ.2,450 கோடி அளவுக்கு நடந்த மோசடிகளில் வங்கி ஊழியர்களே சம்மந்தப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தில் தான் அதிகமான மோசடி நடந்துள்ளது. பொதுத்துறை வங்கிகளில் பல கோடி கடன் மோசடிகளும், அதற்கு காரணமான பெரு நிறுவன உரிமையாளர்கள் வெளிநாடு தப்பிக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்த வண்ணம் உள்ளன. ரூ.9000 கோடி மோசடி செய்த கிங் பிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையா, ரூ.13,000 கோடி மோசடி செய்த குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி ஆகியோர் வெளிநாட்டிற்கு தப்பிவிட்டனர். இந்த மோசடிகளில் பெரு நிறுவன உரிமையாளர்களுக்கு வங்கி அதிகாரிகளே உதவி செய்து, பொதுமக்களின் பணம் வீணாக காரணமாக இருந்திருக்கிறார்கள். இதுதொடர்பாக சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வங்கி பணத்தை ஊழியர்கள் மோசடி செய்யும் சம்பவங்கள் பல ஆண்டாக சத்தமில்லாமல் நடந்து கொண்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளதாவது: கடந்த 2013 ஏப்ரல் முதல் 2016 ஜூன் வரையிலான காலகட்டத்தில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் துணையோடு நடந்த மோசடிகள் மட்டும் 1,232 கோடி ஆகும். இதில், ரூ.2,450 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தென் மாநிலங்கள் மற்றும் மகாராஷ்டிராவில் மட்டும் 49%, அதாவது 609 வழக்குகள் பதிவாகி உள்ளன. மோசடி செய்யப்பட்ட மொத்த தொகை ரூ.462 கோடி. இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 170 வழக்குகள் பதிவாகி உள்ளன. ரூ.83.09 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் 38 வழக்குகளே பதிவாகி இருந்தாலும், அங்கு மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.1,096 கோடி. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் தான் அதிகளவில் வங்கி ஊழியர்கள் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். ராஜஸ்தான், சண்டிகர், டெல்லி, மேற்கு வங்க மாநிலங்களில் குறைந்த புகார்கள் இருந்தாலும், அங்கு நடந்த மோசடிகள் தொகை அடிப்படையில் அதிகமாகும். இதில், ரூ.1 லட்சத்துக்கு குறைவான தொகை கொண்ட மோசடிகள் கணக்கில் கொள்ளப்படவில்லை. அதையும் கணக்கில் கொண்டால் இன்னும் பல கோடிக்கு மோசடி நடந்திருப்பது தெரியும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத வங்கி மேலாளர் ஒருவர் கூறுகையில், ‘‘தென் இந்தியாவில் வங்கி கிளைகளின் எண்ணிக்கை அதிகம். அதன் காரணமாக, மோசடி புகார்களும் அதிகளவில் வந்துள்ளன. மோசடியில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கட்டாயம் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்றார். இதுபோன்று வங்கியில் மோசடியில் ஈடுபடும் ஊழியர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை வங்கி நிர்வாகங்கள் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

என்ன தான் செய்யலாம்?: வங்கி நிபுணர்கள் கூறுகையில், ‘‘ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவு கடன் மோசடிகள் நடந்துள்ளன. தென் மாநிலங்களில் பொதுமக்களின் டெபாசிட் கணக்கில் ஊழியர்கள் கை வைத்துள்ளனர். அதனால் தான் அங்கு குறைவான தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றனர். இத்தகைய மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை எடுப்பதுடன், ஒரே கிளையில் நீண்ட காலம் ஊழியர்கள் பணியாற்றுவதையும் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software